செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16இல் போராட்டம்!

arvloshan.com

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகள், குறித்த புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழியில் 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 583 மனித எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இவ்வாறான சூழலில், பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாகவும், உரிய ஆய்வுகள், மரபணுப் பரிசோதனைகள் மற்றும் தொல்லியல் தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான முக்கியமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில், அது மனிதப் புதைகுழி என்பதைக்கூடத் தெளிவாகக் குறிப்பிடாத வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், குறித்த அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகக் கூறினர்.

செம்மணி மனிதப் புதைகுழி இனப்படுகொலையின் முக்கிய சாட்சியாகக் கருதப்படுவதாகத் தெரிவித்த சங்கப் பிரதிநிதிகள், கடந்த காலங்களில் கொக்குத்தொடுவாய் மற்றும் சதோச மனிதப் புதைகுழிகள் தொடர்பான விவகாரங்களிலும் உரிய நீதி கிடைக்கவில்லை எனத் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

எனவே, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றும், சர்வதேச நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயவியல் ஆய்வுகள் மற்றும் மரபணுப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து பெறப்படும் மரபணு மாதிரிகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இனப்படுகொலையின் முக்கிய சாட்சியாகத் தாம் கருதும் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்!

...

arvoshan.com

நயினாதீவில் வேகமாகப் பரவும் மர்மத் தாவரம் – கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை!

...

arvoshan.com

மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து – சிப்பாய் உயிரிழப்பு; 11 பேர் காயம்

...

arvoshan.com

இலங்கையின் 80 அரச இணையத்தளங்களுக்கு சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஆய்வாளர் எச்சரிக்கை!

...

arvoshan.com

யாழ்ப்பாணத்தில் 350 மில்லியன் ரூபா செலவில் இலவச பராமரிப்பு நிலையம் திறப்பு!

...

arvoshan.com

ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்!

...

arvoshan.com

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 58.5 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

...

arvoshan.com

சிறையில் உள்ள மதத் தலைவர்கள் மத ஆடைகளை அணிய புதிய விதிமுறைகள் வெளியீடு!

...

arvoshan.com

நாட்டுக்காக 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ஷ

...

arvoshan.com

இறால் பிடிப்புத் தடையை மீறிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

...

arvoshan.com

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

...

arvoshan.com

ரூ. 770 கோடி செலவில் அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி நேரில் ஆய்வு!

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவின்படி பௌஸியின் பகிரங்க மன்னிப்புக் கோரல் பத்திரிகையில் வெளியீடு

...

arvoshan.com

மோட்டார் விளையாட்டுச் சங்கத்தின் பதிவை இடைநிறுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்!

...