சென்னையில் ரூ.1,401 கோடி செலவில் 6,157 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் – முதல்வர் விஜய் ஒப்புதல்

arvloshan.com

சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கு தமிழக முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

நகர்ப்புற ஏழை மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு பாதுகாப்பான, தரமான வீடுகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான குடியிருப்புகளை அமைப்பதற்குப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) கீழ் உள்ள பழுதடைந்த குடியிருப்புகளை மீண்டும் கட்டமைப்பதற்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான புதிய வீட்டுவசதித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும் முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ், நவீன வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளன.

கட்டப்படவுள்ள குடியிருப்புகளின் விபரங்கள்:

1. அனாதைக்குப்பம் – 64 குடியிருப்புகள்
2. பழைய பிளாக், வியாசர்பாடி – 1,158 குடியிருப்புகள்
3. ஃபோர்ஷோர் எஸ்டேட் – 1,484 குடியிருப்புகள்
4. ருக்மணி நகர் – 111 குடியிருப்புகள்
5. முல்லை நகர் – 462 குடியிருப்புகள்
6. உதயசூரியன் நகர் – 850 குடியிருப்புகள்
7. பச்சைக்கல் வீராசாமி தெரு – 912 குடியிருப்புகள்
8. மேற்குக் கல்லறை சாலை – 792 குடியிருப்புகள்
9. கக்கன் காலனி – 324 குடியிருப்புகள்

இவ்வாறு சென்னையில் மொத்தம் 9 திட்டப் பகுதிகளில் ரூ.1,401.75 கோடி செலவில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

“தவெக எம்.எல்.ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமா?” – அண்ணாமலை கேள்வி

...

arvoshan.com

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இலங்கையின் கட்டினா பூஜை நிகழ்வு

...

arvoshan.com

சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது: தப்பியோட முயன்ற இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

...

arvoshan.com

உத்தரப் பிரதேசத்தில் கோர விபத்து: கார் தீப்பிடித்து எரிந்ததில் 6 நண்பர்கள் உடல் கருகி உயிரிழப்பு

...

arvoshan.com

கடத்தல் மிரட்டல்: கொல்கத்தாவில் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

...

arvoshan.com

டெல்லியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து – இருவர் உயிரிழப்பு; பலரைத் தேடும் பணி தீவிரம்

...

arvoshan.com

ஆந்திர கடற்பகுதியில் 5 சென்னை மீனவர்கள் சடலமாக மீட்பு; 4 பேரைத் தேடும் பணி தீவிரம்

...

arvoshan.com

“தவெக ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

...

arvoshan.com

மூன்று மாதக் குழந்தைக்கு ‘விஜய்’ எனப் பெயர் சூட்டிய முதல்வர் விஜய் – நெகிழ்ச்சியில் தாய்

...

arvoshan.com

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

...

arvoshan.com

PUBG விளையாட்டின் தாக்கமா? 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!

...

arvoshan.com

இந்தியாவில் கரையைக் கடந்த ‘முரசு’ புயல்; கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை

...

arvoshan.com

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனை!

...

arvoshan.com

கல்லறை திருநாள்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி; கல்லறைகளில் மலர் தூவி உறவினர்கள் அஞ்சலி

...

arvoshan.com

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன – ஸ்டாலின் குற்றச்சாட்டு

...