சிறையில் உள்ள மதத் தலைவர்கள் மத ஆடைகளை அணிய புதிய விதிமுறைகள் வெளியீடு!

arvloshan.com

இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் தங்களது காவியுடைகளை அணிய அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 2026 ஒக்டோபர் 20ஆம் திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் அங்கீகாரத்துடன், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) கீழ், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிலையான கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, பௌத்த பிக்கர் ஒருவர் சிறையில் அடைக்கப்படும்போது, அவர் காவியுடையை களைவது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர், பௌத்த விவகாரங்கள் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, பௌத்த விவகாரங்கள் திணைக்களம் சம்பந்தப்பட்ட நிகாயம் அல்லது பீடத்துக்கு அறிவித்து, அதன் தீர்மானத்தை 10 நாட்களுக்குள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.

குறித்த காலப்பகுதிக்குள் பதில் கிடைக்காத பட்சத்தில், தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய சிறைச்சாலைகள் ஆணையாளர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்கர்கள், கைதிகள் என்ற அடிப்படையில் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும்போதும் காவியுடையை அணிவதற்கு புதிய திருத்தங்கள் அனுமதியளிக்கின்றன.

எனினும், சம்பந்தப்பட்ட நிகாயம் அல்லது பீடம் குறித்த பிக்கர் காவியுடையை அணிவதற்கு அனுமதி வழங்காத பட்சத்தில், சிறைச்சாலைகள் ஆணையாளர் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், பிக்கர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு ஏழு வேலை நாட்களுக்குள், அவரது காவியுடையை அணிவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட நிகாயம் அல்லது பீடத்திடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பௌத்த விவகாரங்கள் திணைக்களத்திடம் சிறைச்சாலைகள் ஆணையாளர் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் பௌத்த பிக்கர்களுக்கு மட்டுமன்றி, தேவையான மாற்றங்களுடன் ஏனைய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களுக்கும் பொருந்தும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்படும் பௌத்த பிக்கர்களின் நடத்தைகள் மற்றும் அவர்கள் காவியுடையை அணிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்தப் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்!

...

arvoshan.com

நயினாதீவில் வேகமாகப் பரவும் மர்மத் தாவரம் – கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை!

...

arvoshan.com

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16இல் போராட்டம்!

...

arvoshan.com

மன்னாரில் இராணுவ வாகனம் விபத்து – சிப்பாய் உயிரிழப்பு; 11 பேர் காயம்

...

arvoshan.com

இலங்கையின் 80 அரச இணையத்தளங்களுக்கு சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஆய்வாளர் எச்சரிக்கை!

...

arvoshan.com

யாழ்ப்பாணத்தில் 350 மில்லியன் ரூபா செலவில் இலவச பராமரிப்பு நிலையம் திறப்பு!

...

arvoshan.com

ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்!

...

arvoshan.com

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 58.5 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

...

arvoshan.com

நாட்டுக்காக 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ஷ

...

arvoshan.com

இறால் பிடிப்புத் தடையை மீறிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

...

arvoshan.com

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

...

arvoshan.com

ரூ. 770 கோடி செலவில் அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி நேரில் ஆய்வு!

...

arvoshan.com

நீதிமன்ற உத்தரவின்படி பௌஸியின் பகிரங்க மன்னிப்புக் கோரல் பத்திரிகையில் வெளியீடு

...

arvoshan.com

மோட்டார் விளையாட்டுச் சங்கத்தின் பதிவை இடைநிறுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்!

...