‘சாதி’ எனும் சவாலை எதிர்கொள்ளும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ : திரைப்பட அறிமுகம்

arvloshan.com

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘வரகரிசி’ சிறுகதையைத் தழுவி உருவான ‘சேத்துமான்’ (2022) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கவனம் ஈர்த்த சிறுவன் அஸ்வின், மீண்டும் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல திரைப்பட இயக்குநர்களான எஸ்.பி.ஜனநாதன், ஹெச்.வினோத் மற்றும் சீனு ராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன், இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

திரைக்கதை அமைப்பு:

தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் தாய் ஒருவர், சமூகப் புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் தனது மகனைச் சதுரங்கப் போட்டியில் சாம்பியனாக உருவாக்கப் போராடும் லட்சியப் பயணமே இப்படத்தின் மையக்கதையாகும். சமுதாயத்தில் நிலவும் சாதியக் தடைகளைக் கடந்து, தாயும் மகனும் தங்கள் இலக்கை எவ்வாறு அடைகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகத் திரைக்கதையில் இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் அஸ்வினின் தாயாராக நடிகை அபர்ணதி முதன்மைப் பாத்திரமேற்று நடித்துள்ளார். இவர்களுடன் லிங்கேஷ், சுரேஷ் மேனன், தமிழரசி மற்றும் அன்பு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, விளையாட்டு மையக் கருவைக் கொண்ட திரைப்படங்களுக்குத் தமிழ் ரசிகர்களிடையே நிலவும் வரவேற்பை ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘சிங்காரம்’ திரைப்படத்தில் உரிமைக்காகப் போராடும் யோகி பாபு: அக்டோபர் 30-ல் திரைக்கு வருகிறது!

...

arvoshan.com

'ஜெயிலர் 2' (Jailer 2) உருவான கதை: ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்கள்!

...

arvoshan.com

மீண்டும் களமிறங்கும் ‘சேனாதிபதி’: ‘இந்தியன் 3’ படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

...

arvoshan.com

ஐமேக்ஸ் (IMAX) திரையரங்குகளில் வெளியாகிறது சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம்!

...

arvoshan.com

‘ஜெயிலர் 2’ சிறப்பு நிகழ்ச்சி அக். 9-ல் ஒளிபரப்பு: படக்குழு அறிவிப்பு

...

arvoshan.com

‘ட்ரோன்ஸ்’ ஃபேண்டஸி திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது!

...

arvoshan.com

15 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் கிடைத்த வெற்றி: ரசிகர்களுக்கு நடிகர் ரிஷிகாந்த் நெகிழ்ச்சி நன்றி

...

arvoshan.com

‘ஓம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

...

arvoshan.com

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்திற்கு சூர்யா, கார்த்தி வாழ்த்து!

...

arvoshan.com

துருவ் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான 'சைமா' விருது!

...

arvoshan.com

‘டோரதி’ திரைப்பட கதைத் திருட்டு: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது புகார்!

...

arvoshan.com

‘பத்தா’ திரைப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சிப் பாராட்டு!

...

arvoshan.com

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ எனும் பெயரில் திரைப்படமாகிறது!

...

arvoshan.com

கணினித் தொழில்நுட்பத்தில் 'யாழி': 'அன்னக்கிளியே' சுயாதீன பாடல் வெளியீடு!

...

arvoshan.com

மணிகண்டனின் 'மக்கள் காவலன்' டிசம்பர் 4இல் வெளியீடு!

...