கற்பிட்டியில் 827 கிலோ கெண்டி இலைகள் கடற்படையினரால் மீட்பு – ஒருவர் கைது!

arvloshan.com

கற்பிட்டி, புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாகக் கடத்துவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோகிராம் கெண்டி இலைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இன்று (28) அதிகாலை இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்தக் கைப்பற்றல் இடம்பெற்றுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயற்படும் SLNS விஜய கப்பலைச் சேர்ந்த கடற்படையினரும் கற்பிட்டி பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, கடத்தலுக்காகப் பொதியிடப்பட்டிருந்த 22 மூட்டைகளில் அடைக்கப்பட்ட சுமார் 827 கிலோகிராம் கெண்டி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றைக் கொண்டு செல்வதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கெண்டி இலைகள், வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஆகியோர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

உலக அமைதிக்கும் நல்லாட்சிக்கும் புத்த தர்மத்தின் போதனைகள் அவசியம் – ஜனாதிபதி அநுர

...

arvoshan.com

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 2 முதல் தடை!

...

arvoshan.com

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

...

arvoshan.com

கினிகத்தேனையில் பேருந்தின் மீது பாறை விழுந்து பயணி ஒருவர் உயிரிழப்பு!

...

arvoshan.com

கத்தோலிக்க பாடசாலைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட குழு நியமனம்

...

arvoshan.com

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ. 27.5 பில்லியன் வருமானம்!

...

arvoshan.com

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 43 இலங்கை குற்றவாளிகள் வெளிநாடுகளில் அடையாளம் – 17 பேர் டுபாயில்!

...

arvoshan.com

எஹெலியகொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் காயம்

...

arvoshan.com

தென் கொரிய விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டனர்!

...

arvoshan.com

“எம்மைப் பிரிந்த பின்னரும் மற்றவர்களுக்கு உயிர் கொடுத்த என் மகன்” – 19 வயது இளைஞனின் இறுதி மனிதநேயக் கொடை

...

arvoshan.com

பொலிஸாருக்கு 400 மின்சார கார்கள், 65,000 மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கத் திட்டம்!

...

arvoshan.com

19 வயது இளைஞரின் இதயத்தால் உயிர் பிழைத்த 14 வயது சிறுவன்!

...

arvoshan.com

தென் கொரியாவில் விபத்து – உயிரிழந்த இரு இலங்கைத் தொழிலாளர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை!

...

arvoshan.com

இலங்கையின் கடன் தரப்படுத்தலை மீண்டும் B+ நிலைக்கு உயர்த்த முடியும் – அரசாங்கம் நம்பிக்கை!

...

arvoshan.com

கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து ஆராய 43 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்!

...