“எம்மைப் பிரிந்த பின்னரும் மற்றவர்களுக்கு உயிர் கொடுத்த என் மகன்” – 19 வயது இளைஞனின் இறுதி மனிதநேயக் கொடை

arvloshan.com

விபத்தொன்றில் சிக்கி மூளைச்சாவடைந்த 19 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர், தனது பெற்றோரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகளைத் தானம் செய்து பல நோயாளிகளுக்கு மறுவாழ்வு பெறும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.

வெயாங்கொடையைச் சேர்ந்த குறித்த இளைஞர், வீதி விபத்தொன்றில் சிக்கியதைத் தொடர்ந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மூளைச்சாவடைந்துள்ளதாக மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றைத் தானம் செய்வதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விசேட மருத்துவக் குழுவினரால் குறித்த உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, இலங்கை விமானப்படையின் உதவியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அவற்றில், இளைஞரின் இதயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 17 வயதுடைய நோயாளி ஒருவருக்குப் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனது மகனை இழந்த தந்தை உருக்கமான வார்த்தைகளில் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“உன்னால் இன்று பலர் உயிர் வாழப்போகிறார்கள். எனது அன்பு மகனே, எம்மைப் பிரிந்து செல்வதற்கு முன்னர் மற்றவர்களுக்கு உயிரைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறாய்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “எனது மகன், அவனது தாய், நான், அவனது மூத்த சகோதரன் மற்றும் சிறிய சகோதரி என நால்வரையும் விட்டுச் சென்றுவிட்டான். நீ இல்லாமல் இந்த வீட்டில் நாங்கள் நால்வரும் எவ்வாறு வாழப்போகிறோம்?” எனவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் உடல் உறுப்புகளைப் பாதுகாப்பாக அகற்றி, உரிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் பணிகள் மருத்துவக் குழுவினர், இலங்கை விமானப்படையினர் மற்றும் இளைஞரின் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனது வாழ்நாளை இழந்தபோதும், தனது உடல் உறுப்புகள் மூலம் பலருக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞரின் இந்த மனிதநேயச் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

உலக அமைதிக்கும் நல்லாட்சிக்கும் புத்த தர்மத்தின் போதனைகள் அவசியம் – ஜனாதிபதி அநுர

...

arvoshan.com

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 2 முதல் தடை!

...

arvoshan.com

கற்பிட்டியில் 827 கிலோ கெண்டி இலைகள் கடற்படையினரால் மீட்பு – ஒருவர் கைது!

...

arvoshan.com

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

...

arvoshan.com

கினிகத்தேனையில் பேருந்தின் மீது பாறை விழுந்து பயணி ஒருவர் உயிரிழப்பு!

...

arvoshan.com

கத்தோலிக்க பாடசாலைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட குழு நியமனம்

...

arvoshan.com

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ. 27.5 பில்லியன் வருமானம்!

...

arvoshan.com

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 43 இலங்கை குற்றவாளிகள் வெளிநாடுகளில் அடையாளம் – 17 பேர் டுபாயில்!

...

arvoshan.com

எஹெலியகொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் காயம்

...

arvoshan.com

தென் கொரிய விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டனர்!

...

arvoshan.com

பொலிஸாருக்கு 400 மின்சார கார்கள், 65,000 மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கத் திட்டம்!

...

arvoshan.com

19 வயது இளைஞரின் இதயத்தால் உயிர் பிழைத்த 14 வயது சிறுவன்!

...

arvoshan.com

தென் கொரியாவில் விபத்து – உயிரிழந்த இரு இலங்கைத் தொழிலாளர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை!

...

arvoshan.com

இலங்கையின் கடன் தரப்படுத்தலை மீண்டும் B+ நிலைக்கு உயர்த்த முடியும் – அரசாங்கம் நம்பிக்கை!

...

arvoshan.com

கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து ஆராய 43 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்!

...