இலங்கைக்கு கடத்த முயன்ற 57 கிலோ போதைப்பொருட்கள் கனடாவில் கைப்பற்றல்: பயணி கைது

arvloshan.com

கனடாவின் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் போது, இலங்கைக்கு கடத்துவதற்காகப் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்களைக் கனடா எல்லை சேவைகள் முகவரகம் கைப்பற்றியுள்ளது.

பயணி ஒருவரின் பயணப் பெட்டிகளைச் பரிசோதித்தபோதே, அதில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 44 கிலோகிராம் கஞ்சா பிசின் (Hashish) மற்றும் 13 கிலோகிராம் கொக்கைன் (Cocaine) ஆகிய அபாயகரமான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் கடந்த செப்டம்பர் 3ஆம் திகதி இடம்பெற்றுள்ள போதிலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலை கனடா எல்லை சேவைகள் முகவரகம் செப்டம்பர் 23ஆம் திகதியே பகிரங்கமாக வெளியிட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொட்டலங்கள் மற்றும் மூன்று பயணப் பெட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களையும் எல்லை சேவைகள் முகவரகம் வெளியிட்டுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகச் சான்றுகளுடன் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், கைது செய்யப்பட்ட நபரின் அடையாளத்தையோ அல்லது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக விபரங்களையோ கனடிய அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.


ஏனைய செய்திகள்

arvoshan.com

லீசிங் நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்ற முடியுமா? சட்ட நிலைமையை தெளிவுபடுத்துகிறது பொலிஸ்

...

arvoshan.com

பொலன்னறுவை மருத்துவமனை வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் உயிரிழப்பு

...

arvoshan.com

திஸ்ஸமஹாராமவில் யானைத் தந்தம் மற்றும் கருபவள ஆபரணங்களுடன் இருவர் கைது!

...

arvoshan.com

வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் PAYE வரியிலிருந்து நிவாரணம்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய குறிப்பு!

...

arvoshan.com

இலங்கையின் சூரிய மின் உற்பத்தி 3,070 மெகாவாட்டைத் தாண்டியது!

...

arvoshan.com

ஒக்டோபர், நவம்பரில் இலங்கைக்கு வெள்ள அபாயம்: வானிலை மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

2025 சாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

...

arvoshan.com

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

...

arvoshan.com

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு: 7 பேர் காயம்!

...

arvoshan.com

பயத்தின் மேலாதிக்கத்தை உடைக்க பல லசந்தாக்கள் உருவாக வேண்டும்: இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்!

...

arvoshan.com

ஒற்றைப் பிரதிக்காக 850 ரூபாய் கட்டணம்: புத்தளத்தில் கடை முற்றுகை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வ நிறைவு

...

arvoshan.com

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் அவர் பிறந்த மண்ணான ஊரெழுவில் அனுஸ்டிப்பு

...

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...