ஒக்டோபர், நவம்பரில் இலங்கைக்கு வெள்ள அபாயம்: வானிலை மையம் எச்சரிக்கை!

arvloshan.com

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு நிலமைகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னாயத்தங்களை மேற்கூறுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்படும் வளிமண்டல சுழற்சி மற்றும் செயற்பாடுகள் காரணமாக, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் பொதுவாக இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலப்பகுதியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி இந்த இரு மாதங்களிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மழையின் தீவிரத்தைப் பொறுத்து, ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் உரிய தயாரிப்பு நடவடிக்கைகள் அவசியமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் ஈரலிப்பான வானிலை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அண்மைக்காலமாக வறட்சியான வானிலை நிலவிய பகுதிகளில் செப்டம்பர் 28, 29 ஆம் திகதிகளிலிருந்து ஒக்டோபர் மாத தொடக்கம் வரை பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை தீவிரமடையக்கூடும் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உடனடி வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

அத்துடன், கடற்பகுதிகள் சிலவற்றில் கடல் அலைகள் 2 முதல் 3 மீற்றர் உயரத்திற்கு எழக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடலோரப் பகுதிகள், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

லீசிங் நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்ற முடியுமா? சட்ட நிலைமையை தெளிவுபடுத்துகிறது பொலிஸ்

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்த முயன்ற 57 கிலோ போதைப்பொருட்கள் கனடாவில் கைப்பற்றல்: பயணி கைது

...

arvoshan.com

பொலன்னறுவை மருத்துவமனை வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் உயிரிழப்பு

...

arvoshan.com

திஸ்ஸமஹாராமவில் யானைத் தந்தம் மற்றும் கருபவள ஆபரணங்களுடன் இருவர் கைது!

...

arvoshan.com

வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் PAYE வரியிலிருந்து நிவாரணம்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய குறிப்பு!

...

arvoshan.com

இலங்கையின் சூரிய மின் உற்பத்தி 3,070 மெகாவாட்டைத் தாண்டியது!

...

arvoshan.com

2025 சாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

...

arvoshan.com

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

...

arvoshan.com

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு: 7 பேர் காயம்!

...

arvoshan.com

பயத்தின் மேலாதிக்கத்தை உடைக்க பல லசந்தாக்கள் உருவாக வேண்டும்: இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்!

...

arvoshan.com

ஒற்றைப் பிரதிக்காக 850 ரூபாய் கட்டணம்: புத்தளத்தில் கடை முற்றுகை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வ நிறைவு

...

arvoshan.com

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் அவர் பிறந்த மண்ணான ஊரெழுவில் அனுஸ்டிப்பு

...

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...