ஆந்திர கடற்பகுதியில் 5 சென்னை மீனவர்கள் சடலமாக மீட்பு; 4 பேரைத் தேடும் பணி தீவிரம்

arvloshan.com

சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன 9 மீனவர்களில் 5 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 4 மீனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கோதபட்டினம் கடலோரப் பகுதியில் மூன்று மீனவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், மீட்கப்பட்ட இரண்டு சடலங்களை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி கா.பக்கிரிசாமி (49), ம.குப்பன் (48), சே.மோகன் (47), கா.ராஜேஷ் (52), ஆ.முருகன் (48), லா.குப்புசாமி (58), சி.விஜயகாந்த் (44), அ.அரவிந்த் (40), மு.நாராயணன் (57) ஆகிய 9 மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், புயல் மற்றும் வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, அவர்கள் ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாகத் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 2ஆம் திகதி இரவு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிப் பயணித்த அவர்களது படகு, நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. இதுகுறித்து, படகிலிருந்த மீனவர்கள் நவம்பர் 3ஆம் திகதி அதிகாலை வயர்லெஸ் தொடர்பு மூலம் மற்றொரு படகிலிருந்த மீனவர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்பின்னர், காணாமல் போன படகிலிருந்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில், தமிழக மற்றும் ஆந்திர மாநில மீன்பிடிப் படகுகள், இந்தியக் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் ஆகியவற்றின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனிடையே, மீனவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 7 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும், அதில் தலா 2 இலட்சம் ரூபாயை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மீட்கப்பட்ட மீனவர்களின் சடலங்களை அரச செலவில் தமிழகத்துக்குக் கொண்டுவந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும், அடையாளம் காணப்படாத இரண்டு சடலங்களை அடையாளம் காணும் பணியையும், காணாமல் போன எஞ்சிய நான்கு மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

டெல்லியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து – இருவர் உயிரிழப்பு; பலரைத் தேடும் பணி தீவிரம்

...

arvoshan.com

“தவெக ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

...

arvoshan.com

மூன்று மாதக் குழந்தைக்கு ‘விஜய்’ எனப் பெயர் சூட்டிய முதல்வர் விஜய் – நெகிழ்ச்சியில் தாய்

...

arvoshan.com

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

...

arvoshan.com

PUBG விளையாட்டின் தாக்கமா? 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!

...

arvoshan.com

இந்தியாவில் கரையைக் கடந்த ‘முரசு’ புயல்; கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை

...

arvoshan.com

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனை!

...

arvoshan.com

கல்லறை திருநாள்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி; கல்லறைகளில் மலர் தூவி உறவினர்கள் அஞ்சலி

...

arvoshan.com

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன – ஸ்டாலின் குற்றச்சாட்டு

...

arvoshan.com

புதுக்கோட்டையில் 13,676 பேருக்கு ரூ.62.73 கோடி நலத்திட்ட உதவிகள் – முதல்வர் விஜய் வழங்கினார்

...

arvoshan.com

அம்பாசமுத்திரத்தில் நவம்பர் 14-ல் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி? இடைத்தேர்தலுக்கு தயாராகும் தவெக!

...

arvoshan.com

தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியால் கைதிகள் சிறையிலிருந்து தப்பும் நிலை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

...

arvoshan.com

மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் – முதல்வர் விஜய்

...

arvoshan.com

அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு – முதல்வர் விஜய் உத்தரவு

...

arvoshan.com

விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா ரூ.18.56 பில்லியன் ஒதுக்கீடு!

...