அரவிந்த டீ சில்வா, அவரது மனைவிக்கு பிடியாணை ! தாயாரின் இறுதிச்சடங்கில் சம்பவம் !!

arvloshan.com

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அரவிந்த டி சில்வாவின் தாயாரின் இறுதிச்சடங்கு புதன்கிழமை (16) கொழும்பில் நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை (14) காலமான அவரது தாயாருக்கு, குடும்பத்தினரும் நண்பர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு எதிரான ஊழல் விசாரணை வழக்கில், பிணையாளர்களாக இருந்த அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், இருவருக்கும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தாயாரின் இறுதிச்சடங்கு காரணமாகவே அரவிந்த டி சில்வாவினால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாமல் போயுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி ஒருவர், அரவிந்த டி சில்வா இந்த வழக்கில் சந்தேகநபர் அல்ல என்றும், பிணையாளராக முன்னிலையாகத் தவறியமையினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரவிந்த டி சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையாகி கோரிக்கை விடுப்பதன் மூலம், சாதாரண நீதிமன்ற நடைமுறைகளின் கீழ் இந்த பிடியாணையினைத் திரும்பப் பெற முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர புகையிரத வேலைநிறுத்தம்!

...

arvoshan.com

மட்டக்குளியில் சொகுசு கார் மோதி கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

...

arvoshan.com

எர்பஸ் முறைகேடு வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

...

arvoshan.com

அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் கனமழை: வெள்ளப் பெருக்கு அபாயம்!

...

arvoshan.com

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு ஒக்டோபர் 28 இல் மீண்டும் விசாரணை

...

arvoshan.com

சீன தூதுவர் - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

...

arvoshan.com

கொழும்பில் 10 மில்லியன் ரூபாய் போலி காணி உறுதி மோசடி: 73 வயது முதியவர் கைது

...

arvoshan.com

நீதிமன்றில் ஞானசார தேரர் முன்னிலை: தலைமறைவுச் செய்திகள் மறுப்பு

...

arvoshan.com

விசாரணைக்கு முன்னிலையானார் திஸ்ஸ குட்டியாரச்சி

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச தொடர்பான குற்றச்சாட்டுக்கு ராஜபக்ச குடும்பம் மறுப்பு!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்: நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அழைப்பாணை குறித்த குழப்பம்

...

arvoshan.com

இலங்கை - தாய்லாந்து: தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் விசா விலக்கு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

...

arvoshan.com

வருமான வரி செலுத்துவதற்கு செப்டம்பர் 30 இறுதி நாள்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

...

arvoshan.com

சவுதி மேற்குப் பகுதி வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: நல்லூரில் வெண்கலச் சிலை திறப்பு!

...