வில் ஸ்மித் – ஜடா பிங்கெட் ஸ்மித் தம்பதியின் லொஸ் ஏஞ்சல்ஸ் இல்லத்தில் தீ விபத்து!

arvloshan.com

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் ஆகியோருக்குச் சொந்தமான அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலாபசாஸ் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வளாகத்தில் தீ பரவுவதாக வில் ஸ்மித்தின் பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து, மலிபு/லொஸ்ட் ஹில்ஸ் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இதன்போது, வளாகத்திலிருந்த பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய கொட்டகை போன்ற கட்டடம் தீப்பற்றி எரிவதை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து, லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தில் வேறு எந்தக் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என்பதுடன், எவரும் காயமடையவோ உயிரிழக்கவோ இல்லை என லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட ஷெரிப் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் தீ விபத்து தற்செயலாக ஏற்பட்டது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சாண்டா மோனிகா மலைத்தொடரில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பு வளாகத்துடன் வில் ஸ்மித் தம்பதி கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்புபட்டுள்ளனர்.

1997ஆம் ஆண்டு முதன்முதலில் அங்குள்ள பண்ணை நிலமொன்றைக் கொள்வனவு செய்த அவர்கள், பின்னர் அருகிலிருந்த நிலப்பகுதிகளையும் வாங்கி சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்டமான குடியிருப்பு வளாகத்தை உருவாக்கினர்.

அங்கு சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில் பாரம்பரிய கட்டடக்கலை அம்சங்களுடன் கூடிய பிரம்மாண்டமான வீட்டையும் அவர்கள் நிர்மாணித்துள்ளனர்.

இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு ஏழு ஆண்டுகள் எடுத்ததாகவும், தென்மேற்கு அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆபிரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பழங்காலக் கலைப்பொருட்கள் மற்றும் கதவுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வில் ஸ்மித் மற்றும் ஜடா பிங்கெட் ஸ்மித் தம்பதியினரின் திருமண வாழ்க்கை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அண்மைய ஆண்டுகளில் இருவரும் மீண்டும் ஒன்றாக வசித்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கண்ணிவெடி தடை ஒப்பந்தம் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது – கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

...

arvoshan.com

ட்ரம்பின் உயரிய விருதைப் பெறும் ரூடி ஜூலியானி!

...

arvoshan.com

டிசம்பர் 16ஆம் திகதி நாடு திரும்பத் திட்டமிடும் ஷேக் ஹசீனா

...

arvoshan.com

மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் அதிகரிப்பு: மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

...

arvoshan.com

நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை ஏன் இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை?

...

arvoshan.com

ட்ரம்ப்புடனான சந்திப்பை நிராகரித்த பின்னணியில், இறைமையைப் பாதுகாத்து வெளிநாட்டு உறவுகளை விரிவுபடுத்துவோம் – கிம் ஜாங் உன்

...

arvoshan.com

தெற்கு சூடானில் மீண்டும் வன்முறை: 7 சிறுவர்கள் உட்பட 24 பொதுமக்கள் பலி

...

arvoshan.com

இந்தோனேசியா தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழப்பு 24 ஆக அதிகரிப்பு – பலர் மாயம்

...

arvoshan.com

ஜிம்பாப்வே மதபோதகர் யூபர்ட் ஏஞ்சல் பாலியல் குற்றச்சாட்டில் கைது

...

arvoshan.com

நியூயோர்க் மாநில செனட் வரலாற்றில் முதல் பலஸ்தீனப் பெண்! அபர் கவாஸ் வரலாற்றுச் சாதனை

...

arvoshan.com

வெளிநாடுகளில் AI தரவு மையங்களை அமைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

...

arvoshan.com

ஐரோப்பாவில் BYD நிறுவனத்தின் புதிய Ti7 SUV விற்பனைக்குத் தடை – லேண்ட் ரோவர் டிஃபென்டருடன் வடிவமைப்பு ஒற்றுமையே காரணம்!

...

arvoshan.com

ஏர்பேக் வெடிக்கும் அபாயம்: அமெரிக்காவில் 3.14 இலட்சத்துக்கும் அதிகமான டொயோட்டா, லெக்ஸஸ் வாகனங்கள் மீளப்பெறப்படுகின்றன!

...

arvoshan.com

அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையப் பாதுகாப்புத் தலைவர் மாற்றம்!

...

arvoshan.com

காசா பகுதியில் ஹமாஸ் சுரங்கத்தை அழிக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறைவு

...