டிசம்பர் 16ஆம் திகதி நாடு திரும்பத் திட்டமிடும் ஷேக் ஹசீனா
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நாடு கடந்து வாழ்ந்து வரும் நிலையில், எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் பங்களாதேஷ் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரில் வெற்றி பெற்றதை நினைவுகூரும் தேசிய தினமான டிசம்பர் 16ஆம் திகதியே அவர் நாடு திரும்புவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அவரது பேச்சாளர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், ஷேக் ஹசீனா பங்களாதேஷுக்குத் திரும்ப வேண்டுமாயின், அவர் நாடு கடத்தல் நடைமுறையின் ஊடாகவே வர வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது 79 வயதான ஷேக் ஹசீனா, நாடு திரும்புவதற்கான குறிப்பிட்ட திகதியொன்றை முதன்முறையாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், பங்களாதேஷில் அரசியல் மற்றும் சட்ட ரீதியான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவரது கட்சிக்கும் அந்நாட்டில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.