போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு – காணொளிகளை WhatsApp மூலம் அனுப்பலாம்

arvloshan.com

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பான காணொளி ஆதாரங்களை WhatsApp ஊடாக அனுப்புமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 070-4755600 என்ற WhatsApp இலக்கத்திற்கு, ஆபத்தான வாகன ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான காணொளிகளை அனுப்ப முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் இதுவரை பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக வேகத்தில் வாகனங்களைச் செலுத்துதல், கவனக்குறைவான வாகன ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளைப் புறக்கணித்தல் ஆகியன நாட்டில் இடம்பெறும் பாரிய மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாக அமைவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, அனுமதியற்ற மற்றும் ஆபத்தான மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பிலும் பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர். இத்தகைய மாற்றங்கள் பயணிகள் மற்றும் ஏனைய வீதிப் பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற சில விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளில், விபத்துக்குள்ளான பேருந்துகள் சில முறையான வாகனத் தகுதிச் சான்றிதழ்கள் இன்றியும், உரிய அனுமதிகள் இன்றியும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிகளவில் கறும்புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பான முறைப்பாடுகளையும் 070-3500525 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்புமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும்போது, வாகனத்தின் பதிவு இலக்கம், சம்பவம் இடம்பெற்ற திகதி மற்றும் இடம் ஆகிய விபரங்களுடன் புகைப்படங்கள் அல்லது காணொளி ஆதாரங்களையும் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, போக்குவரத்து தொடர்பான சம்பவங்களைப் பின்வரும் அவசர இலக்கங்கள் ஊடாகவும் அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- பொலிஸ் அவசர இலக்கம் – 119
- கொழும்பு அவசர அழைப்புப் பிரிவு – 0112-433333
- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு – 1955

வாகன உரிமையாளர்களும் சாரதிகளும் தங்களது வாகனங்கள் சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதை உறுதிப்படுத்திய பின்னரே வீதிகளில் இயக்க வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்றும், சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தையிட்டி விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீளக் கையளிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் போராட்டம்

...

arvoshan.com

ரணில் – அனுர வெளிநாட்டுப் பயணச் செலவுகளில் பெரும் வித்தியாசம்!

...

arvoshan.com

பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை

...

arvoshan.com

இந்தியப் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

...

arvoshan.com

கொழும்பு தங்க நகைக் கடைகளில் நூதன முறையில் திருட்டு – 37 வயதுடைய சந்தேகநபர் கைது

...

arvoshan.com

நீரிழிவு மற்றும் இதய நோயாளர்களுக்கான மருந்துகள்: இந்தியா, சீன நிறுவனங்களுக்கு 5.1 மில்லியன் டொலர் ஒப்பந்தம்

...

arvoshan.com

புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்திக்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி

...

arvoshan.com

பிரிட்டனின் உதவியுடன் இலங்கை சுங்கத் துறையில் சீர்திருத்தங்களை முன்னெடுக்க நடவடிக்கை

...

arvoshan.com

கொழும்பு துறைமுக நகரில் தெற்காசியாவின் முதலாவது ‘ஏர் டோம்’ அமைப்பு – 4,000 பேருக்கு இடமளிக்கும் வசதி

...

arvoshan.com

வெளிநாடுகளால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 2026இல் 40ஆகக் குறைவு

...

arvoshan.com

சிங்கப்பூரில் தீபாவளி விழாவைக் கொண்டாடிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

...

arvoshan.com

பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் நாளை ஒருநாள் பணிப்புறக்கணிப்பு

...

arvoshan.com

பட்டிப்பொல வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஆறு பேர் கைது

...

arvoshan.com

மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம்: 24 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை

...

arvoshan.com

வெளிவிவகார அமைச்சுக்கான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

...