தையிட்டி விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீளக் கையளிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் போராட்டம்
தையிட்டியில் அமைந்துள்ள விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்ட தமது தனியார் காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று (24) செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று (23) திங்கட்கிழமை ஆரம்பமான இப்போராட்டம், இன்று மாலை வரையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டது.