பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு - அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

arvloshan.com

பெண் அரச அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்ட காலத்தில், அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த அரச பெண் உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்துத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அண்மையில் சமூகவலைத்தள நேரலை ஊடாக நியாயம் கேட்டிருந்ததோடு, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காகப் பணியகத்திற்கு வருகை தந்த வேளையில், பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை (18) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பில் வரி எதிர்ப்புப் போராட்டம்: 6 பேர் கைது

...

arvoshan.com

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், இருவர் கைது

...

arvoshan.com

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் கைது

...

arvoshan.com

உஸ்பெகிஸ்தான் பெண்ணைப் பாலியல் தொழிலில் தள்ளிய முச்சக்கர வண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை!

...

arvoshan.com

மருந்தகங்கள் ஊடாக போதை மாத்திரைகள் விற்பனை? – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அதிர்ச்சித் தகவல்

...

arvoshan.com

கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்: வரிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தல்!

...

arvoshan.com

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு அரச நிதி பற்றிய குழு அனுமதி

...

arvoshan.com

பொரளையில் எதிர்ப்பு பேரணி: கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!

...

arvoshan.com

நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி திட்டம் முடங்கும் அபாயம்: புதிய சட்டத் திருத்தத்திற்கு GMOA எதிர்ப்பு

...

arvoshan.com

நச்சு இரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களைக் கண்டறிவது எப்படி? நிபுணர் விளக்கம்

...

arvoshan.com

இலங்கையின் வேலையின்மை விகிதம் 2026 இரண்டாம் காலாண்டில் 4 சதவீதமாக அதிகரிப்பு

...

arvoshan.com

மக்காச்சோள இறக்குமதியில் தாமதம்: பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை விலைகள் உயரும் அபாயம்!

...

arvoshan.com

சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த 'பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அறக்கட்டளை' உருவாக்கம்

...

arvoshan.com

போதைப்பொருள் கடத்தல்: நீர்கொழும்பில் ரூ. 44.5 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்!

...

arvoshan.com

இளம் அரசியல்வாதி கனிஷ்க சேனாநாயக்க காலமானார்!

...