பொதுநலவாய உச்சி மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரதமர் ஹரிணி!

arvloshan.com

இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026ஆம் ஆண்டுக்கான 28ஆவது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கவுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை அன்டிகுவா மற்றும் பார்புடாவின் தலைநகரான சென். ஜோன்ஸில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, பொதுநலவாய அமைப்பின் 56 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, 'செழிப்பான பொதுநலவாயத்திற்கான கூட்டாண்மை மற்றும் முதலீடுகளை விரைவுபடுத்துதல்' என்ற தொனிப்பொருளில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் போது நடைபெறும் முக்கிய அமர்வுகள் மற்றும் தலைவர்களின் விசேட கலந்துரையாடல்களில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்கவுள்ளார்.

இதன்போது பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகளை ஊக்குவித்தல், டிஜிட்டல் மாற்றம், இளைஞர் வலுவூட்டல், காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட விடயங்களில் இலங்கையின் முன்னுரிமைகள் தொடர்பில் அவர் எடுத்துரைக்கவுள்ளார்.

அத்துடன், பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்புகள் ஊடாக இலங்கையின் இராஜதந்திர உறவுகள், வர்த்தகத் தொடர்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பொதுநலவாய பெண்கள் மன்றம், பொதுநலவாய தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான முதலீட்டு உச்சி மாநாடு, உலகளாவிய கண் சுகாதார உச்சி மாநாடு ஆகிய நிகழ்வுகளிலும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

முதலீடுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி, பெண்களின் வலுவூட்டல் மற்றும் உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இலங்கையின் நிலைப்பாடுகளையும் முன்னுரிமைகளையும் பிரதமரின் இந்தப் பங்கேற்பு வெளிப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மேலும் வரிக்குறைப்புகள் – ஜனாதிபதி அநுர குமார அறிவிப்பு!

...

arvoshan.com

காட்டு யானையைப் பிடிக்க அல்லது காயப்படுத்த பொறி வெடி வைத்த நபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம்!

...

arvoshan.com

கொழும்பில் 5.96 கோடி ரூபாய் நிதி மோசடி – தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

மீண்டும் இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள்!

...

arvoshan.com

நவம்பர் 2 முதல் மீண்டும் இணையவழி முன்பதிவு முறை அமுல்!

...

arvoshan.com

திருடனைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் – திருடப்பட்ட கைப்பேசியை மீட்டார்!

...

arvoshan.com

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 51.5 சதவீதத்தால் அதிகரிப்பு – 4.5 பில்லியன் டொலரை எட்டியது

...

arvoshan.com

2026ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலங்கையர்கள் செலவிட்ட தொகை 62% அதிகரிப்பு!

...

arvoshan.com

நாளை முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய மின்தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகின் செயலிழப்பே காரணம் – ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை

...

arvoshan.com

வாட்ஸ்அப் ஊடாகப் பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி 14.5 இலட்சம் ரூபாய் மோசடி – பெண் கைது!

...

arvoshan.com

வாகன இறக்குமதிச் செலவில் செப்டம்பரில் 34.4% வீழ்ச்சி!

...

arvoshan.com

நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை – ஒரு மில்லியன் ரூபா அபராதம், 10 ஆண்டுகள் சிறை!

...

arvoshan.com

தங்கத்தைப் பறிக்க வர்த்தகரை சித்திரவதை செய்த பொலிஸார் – மூன்று அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

...

arvoshan.com

அகதியாக 7 வயதில் தமிழகம் வந்த இலங்கை இளைஞர் – 30 ஆண்டுகளாக அடையாளம் தேடும் அவலம்!

...