உலக பௌத்த சங்கத்தின் 60ஆவது ஆண்டு விழா கொழும்பில் ஆரம்பம்!

arvloshan.com

உலக பௌத்த சங்கத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60ஆவது ஆண்டு விழா மற்றும் அதன் 11ஆவது பொதுக் கூட்டத்தின் இரண்டாவது நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (நவம்பர் 28) இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளின் பிரதான மையமாக நாகானந்த சர்வதேச பௌத்த கற்கைகள் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தேரவாத, மகாயான மற்றும் வஜ்ரயான பௌத்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 5,000 பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இலங்கையைச் சேர்ந்த சுமார் 500 பௌத்த பிக்குகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 800 பொதுமக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 30ஆம் திகதி அனுராதபுரத்தில் விசேட மத வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இதன்போது உலக அமைதியை வேண்டி ஜய ஸ்ரீ மகா போதிக்கு விசேட காணிக்கை செலுத்தப்படவுள்ளது.

தொடர்ந்து, டிசம்பர் 1ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் ருவன்வெலிசாய ஆகிய புனித தலங்களிலும் விசேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1966ஆம் ஆண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட உலக பௌத்த சங்கத்தின் முந்தைய மாநாடு 2024ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

உலக அமைதிக்கும் நல்லாட்சிக்கும் புத்த தர்மத்தின் போதனைகள் அவசியம் – ஜனாதிபதி அநுர

...

arvoshan.com

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 2 முதல் தடை!

...

arvoshan.com

கற்பிட்டியில் 827 கிலோ கெண்டி இலைகள் கடற்படையினரால் மீட்பு – ஒருவர் கைது!

...

arvoshan.com

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

...

arvoshan.com

கினிகத்தேனையில் பேருந்தின் மீது பாறை விழுந்து பயணி ஒருவர் உயிரிழப்பு!

...

arvoshan.com

கத்தோலிக்க பாடசாலைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட குழு நியமனம்

...

arvoshan.com

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ. 27.5 பில்லியன் வருமானம்!

...

arvoshan.com

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 43 இலங்கை குற்றவாளிகள் வெளிநாடுகளில் அடையாளம் – 17 பேர் டுபாயில்!

...

arvoshan.com

எஹெலியகொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் காயம்

...

arvoshan.com

தென் கொரிய விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டனர்!

...

arvoshan.com

“எம்மைப் பிரிந்த பின்னரும் மற்றவர்களுக்கு உயிர் கொடுத்த என் மகன்” – 19 வயது இளைஞனின் இறுதி மனிதநேயக் கொடை

...

arvoshan.com

பொலிஸாருக்கு 400 மின்சார கார்கள், 65,000 மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கத் திட்டம்!

...

arvoshan.com

19 வயது இளைஞரின் இதயத்தால் உயிர் பிழைத்த 14 வயது சிறுவன்!

...

arvoshan.com

தென் கொரியாவில் விபத்து – உயிரிழந்த இரு இலங்கைத் தொழிலாளர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை!

...

arvoshan.com

இலங்கையின் கடன் தரப்படுத்தலை மீண்டும் B+ நிலைக்கு உயர்த்த முடியும் – அரசாங்கம் நம்பிக்கை!

...