இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!
இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இதற்கமைய, 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அங்கீகாரம் பெற்றுள்ள புதிய அரசியல் கட்சிகள் வருமாறு:
1. எமது மக்கள் முன்னணி (Our People’s Front)
2. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (Thamil Makkal Viduthalai Pulikal)
3. தமிழ் தேசிய பசுமை அமைப்பு (Tamil National Green Organization)
இந்த மூன்று கட்சிகளும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(5) ஆம் பிரிவின் கீழ், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.