வருமான இலக்கைத் தாண்டியது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
2026ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட வருடாந்த வருமான இலக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) தாண்டியுள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 2,441.9 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்காக 2,402 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த இலக்கைத் தாண்டி வருமானம் திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு மேலதிகமாக 491 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 115 சதவீத அதிகரிப்பாகும்.
வரி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வரி வசூல் நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் வரி விதிமுறைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ள இணக்கம் ஆகியவை இந்த வருமான அதிகரிப்புக்குப் பங்களித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.