2027 பாடநூல் அச்சிடலுக்கு ரூ. 1.61 பில்லியன்: 21 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்

arvloshan.com

2027ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காகத் தேவையான பாடநூல்கள் மற்றும் கற்றல் தொகுதிகளை அச்சிடும் பணிக்காக, 21 அச்சிடும் நிறுவனங்களுக்கு 1,614.69 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 1, 2 மற்றும் 6ஆம் தர மாணவர்களுக்குத் தேவையான கற்றல் தொகுதிகள் உட்பட 421 வகையான பாடநூல்களும் கற்றல் தொகுதிகளும் அச்சிடப்படவுள்ளன.

தேசிய போட்டிமுறை கொள்முதல் நடைமுறையின் கீழ், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிடும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கோரப்பட்ட ஏலங்களில் (Bids) மொத்தம் 31 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

குறித்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர் மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தகுதிபெற்ற 21 அச்சிடும் நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படவுள்ள ஒப்பந்தங்களின் மொத்தப் பெறுமதியான 1.614 பில்லியன் ரூபாயில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அச்சிடல் ஒப்பந்தங்களுக்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

12.35 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சிறைச்சாலை உதவி அத்தியாட்சகர் கைது

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

...

arvoshan.com

யாழ்ப்பாணத்தில் பெண் படுகொலை: தாயாருக்கு படுகாயம் விளைவித்த இளைஞன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை

...

arvoshan.com

மீசாலையில் உழவு இயந்திரம் மோதி சோகம்: 36 வயது பெண் உத்தியோகஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!

...

arvoshan.com

பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான மாத்தறை காணியைப் பயன்படுத்தத் தடை விதிக்க FCID நடவடிக்கை

...

arvoshan.com

2026 உயர் தர மனைப் பொருளியல் செய்முறைப் பரீட்சைகள் அக்டோபர் 10 முதல் ஆரம்பம்

...

arvoshan.com

நெடுந்தீவு - யாழ்ப்பாண கடல் பாதையில் 150 பயணிகள் பயணிக்கும் புதிய படகு சேவை: அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

கொழும்பு வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 91 மில்லியன் செலவில் சாத்தியக்கூறு ஆய்வு

...

arvoshan.com

சுரேஷ் சாலே மீண்டும் CID-யிடம் ஒப்படைப்பு: மருத்துவமனை அனுமதி முடிவு

...

arvoshan.com

e-Court திட்டம்: 350 நீதிமன்றங்களுக்கு 1,050 உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள்!

...

arvoshan.com

கிரிஷ் வழக்கில் புதிய திருப்பம்: ரூ. 70 மில்லியன் நிதி மாயமானது அம்பலம்!

...

arvoshan.com

ஜனாதிபதி முன்னிலையில் இரு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்

...

arvoshan.com

இலங்கை - தாய்லாந்து இடையே விசா இல்லாத பயண ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் மகிந்த கஹந்தகமவுக்கு தொடர்பு: விசாரணையில் அம்பலம்!

...

arvoshan.com

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: கொழும்பு மாநகர சபை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது

...