ஜனாதிபதி முன்னிலையில் இரு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக இருவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (06) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் எச். எம். ஆர். எம். திலகரத்ன ஆகியோரே இவ்வாறு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டோராவர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்நிகழ்வு நடைபெற்றது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவிய வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே இவ்விரு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.