மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: கொழும்பு மாநகர சபை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது

arvloshan.com

மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் ஆரம்பக்கட்ட பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் கொழும்பு மாநகர சபை தலைமையகக் கட்டிடம் நேற்று (05) இளஞ்சிவப்பு (Pink) நிற விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது.

அக்டோபர் மாதம் முழுவதும் சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையும் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு மேயர் விராய் கலி பால்தாசர் தெரிவித்துள்ளார்.

இந்நோயின் தீவிரத் தன்மை குறித்துக் கருத்து வெளியிட்ட மேயர், நாட்டில் தினமும் புதிதாக 17 மார்பகப் புற்றுநோய் நோயாளர்கள் கண்டறியப்படுவதாகவும், நாளாந்தம் மூன்று பெண்கள் இந்நோயினால் உயிரிழப்பதாகவும் வேதனை வெளியிட்டார்.

எனினும், நோயைப் பற்றிய விழிப்புணர்வு, முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சுய பரிசோதனைகள் மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அக்டோபர் மாதம் முழுவதும் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடருமாறும், பெண்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு பொதுமக்களுக்கு மேயர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், நாடு முழுவதும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வையும் ஆரம்பக் கட்டக் கண்டறிதலின் முக்கியத்துவத்தையும் பரப்பும் வகையில் செயற்பட்டு வரும் 'இந்திரா புற்றுநோய் அரக்கட்டளைக்கு' கொழும்பு மேயர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

12.35 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சிறைச்சாலை உதவி அத்தியாட்சகர் கைது

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

...

arvoshan.com

யாழ்ப்பாணத்தில் பெண் படுகொலை: தாயாருக்கு படுகாயம் விளைவித்த இளைஞன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை

...

arvoshan.com

மீசாலையில் உழவு இயந்திரம் மோதி சோகம்: 36 வயது பெண் உத்தியோகஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!

...

arvoshan.com

பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான மாத்தறை காணியைப் பயன்படுத்தத் தடை விதிக்க FCID நடவடிக்கை

...

arvoshan.com

2026 உயர் தர மனைப் பொருளியல் செய்முறைப் பரீட்சைகள் அக்டோபர் 10 முதல் ஆரம்பம்

...

arvoshan.com

நெடுந்தீவு - யாழ்ப்பாண கடல் பாதையில் 150 பயணிகள் பயணிக்கும் புதிய படகு சேவை: அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

கொழும்பு வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 91 மில்லியன் செலவில் சாத்தியக்கூறு ஆய்வு

...

arvoshan.com

சுரேஷ் சாலே மீண்டும் CID-யிடம் ஒப்படைப்பு: மருத்துவமனை அனுமதி முடிவு

...

arvoshan.com

2027 பாடநூல் அச்சிடலுக்கு ரூ. 1.61 பில்லியன்: 21 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்

...

arvoshan.com

e-Court திட்டம்: 350 நீதிமன்றங்களுக்கு 1,050 உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள்!

...

arvoshan.com

கிரிஷ் வழக்கில் புதிய திருப்பம்: ரூ. 70 மில்லியன் நிதி மாயமானது அம்பலம்!

...

arvoshan.com

ஜனாதிபதி முன்னிலையில் இரு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்

...

arvoshan.com

இலங்கை - தாய்லாந்து இடையே விசா இல்லாத பயண ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் மகிந்த கஹந்தகமவுக்கு தொடர்பு: விசாரணையில் அம்பலம்!

...