2026 உயர் தர மனைப் பொருளியல் செய்முறைப் பரீட்சைகள் அக்டோபர் 10 முதல் ஆரம்பம்
க.பொ.த (உயர் தர) மனைப் பொருளியல் பாடம் தொடர்பான செய்முறைப் பரீட்சைகள் வரும் அக்டோபர் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 44 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எழுதுகோல் மூலமான பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்காகவே இந்த செய்முறைப் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளன.
பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பார்ட் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்தது.
அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் வரும் அக்டோபர் 7 ஆம் திகதி முதல் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து (Website) அவற்றை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களுக்கு 1911 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் (Hotline) மூலமாகவோ அல்லது 011 2784208, 011 2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வாயிலாகவோ பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.