வெளிவிவகார அமைச்சுக்கான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு எவ்வித திருத்தங்களும் இன்றி, வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாள் அமர்வின்போதே, திங்கட்கிழமை (நவம்பர் 23) குறித்த அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகள் தடுப்புச் சட்டமூலமும் இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து எவ்வித திருத்தங்களும் இன்றி, வாக்கெடுப்புக்கு விடப்படாமல் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.