வர்த்தக அமைச்சின் தலையீட்டால் LAUGFS எரிவாயு விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு!
வர்த்தக அமைச்சின் தலையீட்டைத் தொடர்ந்து LAUGFS சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் LAUGFS எரிவாயு சிலிண்டரின் விலை 745 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னர் 6,740 ரூபாவாக இருந்த சிலிண்டரின் புதிய விலை 5,995 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 5 கிலோகிராம் LAUGFS எரிவாயு சிலிண்டரின் விலையும் 322 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2,720 ரூபாவாக இருந்த அதன் புதிய விலை 2,398 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பு வர்த்தக அமைச்சின் தலையீட்டின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பானது LAUGFS சமையல் எரிவாயு நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.