ருவன்வெலிசாய அருகே மோதல்: 14 தையல்களுடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய ராஜாங்கனை சத்தரதன தேரர்

arvloshan.com

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பிக்குகள் முன்னெடுத்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜாங்கனை சத்தரதன தேரர், தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து தாம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது தலையில் 14 தையல்கள் போடப்பட்ட நிலையில் வெளியேறுவதாகவும் அவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது உயிருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள அவர், மீண்டும் ஏதேனும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டால் அநுராதபுரத்திற்குத் திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தனக்குச் சிகிச்சையளித்த மருத்துவப் பணியாளர்கள், பொலிஸார், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிகிச்சைக் காலத்தில் ஆதரவளித்த பொதுமக்கள் அனைவருக்கும் அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

யாழ்ப்பாணத்தில் விபத்து: தந்தையும் மகனும் பலி; சாரதி தப்பியோட்டம்!

...

arvoshan.com

LAUGFS எரிவாயு விலை 35 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு

...

arvoshan.com

சிலாபத்தில் 1.6 தொன்னுக்கும் அதிகமான சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு – நால்வர் கைது!

...

arvoshan.com

போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கப்பட்ட ரூ.55 இலட்சம் பெறுமதியான டிப்பர் வாகனம் முடக்கம்!

...

arvoshan.com

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் விவகாரத்தில் முடிவு – தேர்தல்கள் ஆணைக்குழு

...

arvoshan.com

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு – செங்குத்து எச்சரிக்கை!

...

arvoshan.com

சவூதி அரேபியாவில் பணிபுரிந்த 40 இலங்கைத் தொழிலாளர்களுக்கு 5.69 கோடி ரூபாய் நிலுவைச் சம்பளம் மீட்பு!

...

arvoshan.com

ஜே.வி.பி அரசு 1988–89 இலட்சியங்களைக் காட்டிக்கொடுத்துள்ளது – முன்னிலை சோசலிசக் கட்சி

...

arvoshan.com

வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி 30ஆவது வாரமாகவும் போராட்டம்

...

arvoshan.com

கல்வித்துறைக்கு வரலாற்றில் அதிகூடிய 749 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

இலங்கையின் மருந்துத் தேவையில் 25 வீதத்தைப் பூர்த்தி செய்ய இலக்கு – பிங்கிரியவில் பிரம்மாண்ட மருந்துத் தொழிற்சாலை

...

arvoshan.com

இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப் படகிலிருந்து ரூ.1.5 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

இலங்கைக்கு 50 மருத்துவப் பரிசோதனை நிலையங்களை வழங்க இந்தியா ரூ.225 மில்லியன் நிதியுதவி

...

arvoshan.com

2030ஆம் ஆண்டுக்குள் கடலுணவு ஏற்றுமதி வருமானத்தை 680 மில்லியன் டொலராக உயர்த்த இலங்கை இலக்கு

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: வாகனங்கள் தொடர்பில் வெளியான புதிய முன்மொழிவுகள்

...