யாழ்ப்பாணத்தில் விபத்து: தந்தையும் மகனும் பலி; சாரதி தப்பியோட்டம்!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தந்தையும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் மீது, அவர்களுக்குப் பின்னால் வந்த கே.டி.எச் (KDH) ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, கே.டி.எச் வாகனத்தில் பயணித்தவர்கள் வாகனத்தைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த வாகனத்தின் சாரதி உள்ளிட்ட அதில் பயணித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி உள்ளிட்டவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரி, அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.