யாழ்ப்பாணத்தில் பெண் படுகொலை: தாயாருக்கு படுகாயம் விளைவித்த இளைஞன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை

arvloshan.com

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டி படுகொலை செய்த இளைஞன், அப்பெண்ணின் தாயாரையும் படுகாயப்படுத்திவிட்டு புகையிரதத்தின் (Train) முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம் ஒன்று திங்கட்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவன், அங்கிருந்த ஒரு பிள்ளையின் தாயாரான இளம் விரிவுரையாளர் மீது கத்தியால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளான். மேலும், அப்பெண்ணின் தலைமுடியையும் கத்தியால் அறுத்து கொடூரமாகத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, வீடிலிருந்த பெண்ணின் தாயார் மீதும் குறித்த இளைஞன் கத்திவெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளான். இதில் படுகாயமடைந்த தாயார், உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற தாக்குதல்தாரி, அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளான்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமையல் கலைஞரான ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணைக் கொலை செய்துவிட்டுப் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டவர் கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புகழரசன் (வயது 23) என அடையாளி காணப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண் சமையல் கலைஞராகப் பணியாற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் , உயிரிழந்த இளைஞனும் சமையற்கலை பயிற்சியினை நிறைவு செய்து, பயிற்சி சமையல் கலைஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய காதல் விவகாரமே இந்தக் கொலைச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூற்றுப் பரிசோதனைக்காக (Autopsy) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் மறுமணம் செய்யாது தனது பெண் குழந்தையுடன் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

12.35 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சிறைச்சாலை உதவி அத்தியாட்சகர் கைது

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

...

arvoshan.com

மீசாலையில் உழவு இயந்திரம் மோதி சோகம்: 36 வயது பெண் உத்தியோகஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!

...

arvoshan.com

பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான மாத்தறை காணியைப் பயன்படுத்தத் தடை விதிக்க FCID நடவடிக்கை

...

arvoshan.com

2026 உயர் தர மனைப் பொருளியல் செய்முறைப் பரீட்சைகள் அக்டோபர் 10 முதல் ஆரம்பம்

...

arvoshan.com

நெடுந்தீவு - யாழ்ப்பாண கடல் பாதையில் 150 பயணிகள் பயணிக்கும் புதிய படகு சேவை: அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

கொழும்பு வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 91 மில்லியன் செலவில் சாத்தியக்கூறு ஆய்வு

...

arvoshan.com

சுரேஷ் சாலே மீண்டும் CID-யிடம் ஒப்படைப்பு: மருத்துவமனை அனுமதி முடிவு

...

arvoshan.com

2027 பாடநூல் அச்சிடலுக்கு ரூ. 1.61 பில்லியன்: 21 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்

...

arvoshan.com

e-Court திட்டம்: 350 நீதிமன்றங்களுக்கு 1,050 உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள்!

...

arvoshan.com

கிரிஷ் வழக்கில் புதிய திருப்பம்: ரூ. 70 மில்லியன் நிதி மாயமானது அம்பலம்!

...

arvoshan.com

ஜனாதிபதி முன்னிலையில் இரு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்

...

arvoshan.com

இலங்கை - தாய்லாந்து இடையே விசா இல்லாத பயண ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் மகிந்த கஹந்தகமவுக்கு தொடர்பு: விசாரணையில் அம்பலம்!

...

arvoshan.com

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: கொழும்பு மாநகர சபை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது

...