மோசமான காற்றுத் தரம்: சென்னை, திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானங்கள் இரத்து
மோசமான காற்றுத் தரம் காரணமாக, இன்று (19) திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணிக்கத் திட்டமிடப்பட்டிருந்த விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
காற்றின் தரம் பாதிக்கப்பட்டதால், விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச பார்வைத் தெளிவு (Visibility) கிடைக்கவில்லை என யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, குறித்த விமானங்களின் திட்டமிடப்பட்ட வருகைகள் இரத்துச் செய்யப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.