பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘ரொட்டும்ப அமில’ நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்!

arvloshan.com

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான ‘ரொட்டும்ப அமில’ என அழைக்கப்படும் அமில சம்பத் சேபால ரத்நாயக்க, நாளை (20) வெள்ளிக்கிழமை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று ஏற்கனவே ரஷ்யாவுக்குப் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள், கப்பம் கோருதல் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் ரொட்டும்ப அமில தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் நீண்டகாலமாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து நாட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகியிருந்த அவர், சர்வதேச பொலிஸாரின் (INTERPOL) சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரது கைது தொடர்பில் ரஷ்யப் பொலிஸார் இலங்கை அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், தன்னை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் மேன்முறையீடு செய்திருந்ததால், அவரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

மேலும், இலங்கைக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து அந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்ததாக இலங்கைப் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

மாத்தறை, ரொட்டும்ப பகுதியைச் சேர்ந்த அமில சம்பத் சேபால ரத்நாயக்கவுக்கு எதிராக, 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி ஊருபொக்க பகுதியில் வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதேவேளை, 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி அவர் டுபாய்க்குத் தப்பிச் சென்றிருந்தார். பின்னர், 2019ஆம் ஆண்டு டுபாயில் பாதாள உலகக் குழுத் தலைவராக அறியப்பட்ட மாகந்துரே மதுஷ் நடத்திய களியாட்ட நிகழ்வின்போது, ஐக்கிய அரபு அமீரகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கஞ்சிப்பானை இம்ரானுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவர், மாத்தறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மீண்டும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி; வாழ்நாள் முழுவதும் வாகனம் செலுத்தத் தடை விதித்த நீதிமன்றம்!

...

arvoshan.com

ஹட்டன் நகரில் அனுமதியற்ற கடைகள் அகற்றம் – வியாபாரிகள், நகரசபை அதிகாரிகள் இடையே முறுகல்

...

arvoshan.com

நீதிமன்றம் நோக்கிச் சென்ற குணாளன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் – மூன்று விரல்கள் துண்டிப்பு

...

arvoshan.com

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோ ஹெரோயின் இந்தியாவில் மீட்பு – இருவர் கைது

...

arvoshan.com

அனைத்து மாகாணங்களிலும் ஆசிரியர் நியமன நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

...

arvoshan.com

மோசமான காற்றுத் தரம்: சென்னை, திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானங்கள் இரத்து

...

arvoshan.com

சிறுவனை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

...

arvoshan.com

மன்னாரில் சுகாதார விதிமீறல்கள்: மூன்று உணவகங்களுக்கு ரூ.95,000 அபராதம்

...

arvoshan.com

இலங்கையில் ஐஸ்கிரீம் தரம் குறித்து விசேட சோதனைகள் – மூலப்பொருட்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம்

...

arvoshan.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக நாடளாவிய போராட்டம் – செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை!

...

arvoshan.com

அழுங்கினத்தைச் சேர்ந்த எறும்புத்தின்னியை அடித்துக் கொன்ற சம்பவம்; மூவர் கைது – மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

...

arvoshan.com

124 பொருள் வகைகளுக்கான தேசிய வர்த்தக டிஜிட்டல் தளத்தை வர்த்தமானியில் வெளியிட்டது இலங்கை

...

arvoshan.com

ஏர்பஸ் ஊழல் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு – டிசம்பர் 2 வரை விளக்கமறியல்

...

arvoshan.com

வாகன இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான தாமதம் – 2027 ஆகஸ்ட் வரை காத்திருக்க வேண்டிய நிலை!

...

arvoshan.com

அரச பொறியியலாளர்களுக்கான களப்பணி கொடுப்பனவை ரூ.75,000 ஆக அதிகரிக்க சஜித் கோரிக்கை

...