அனைத்து மாகாணங்களிலும் ஆசிரியர் நியமன நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

arvloshan.com

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை (20) அனைத்து மாகாணங்களிலும் நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் பின்வரும் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் – நவம்பர் 29
- வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் – நவம்பர் 28
- ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்கள் – நவம்பர் 26
- மத்திய மாகாணம் – டிசம்பர் 1

எவ்வாறாயினும், நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுகளுக்கு மாத்திரமே இந்த மாற்றம் பொருந்தும் எனவும், நவம்பர் 21ஆம் திகதி முதல் திட்டமிடப்பட்டுள்ள நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளின்படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாடசாலை விருப்பத் தெரிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு விண்ணப்ப முறைமை நவம்பர் 19ஆம் திகதி முதல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்டதைப் போன்று நவம்பர் 19ஆம் திகதியுடன் இந்த முறைமைக்கான கால அவகாசம் நிறைவடையாது எனவும், விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்காக அழைப்பு விடுக்கப்பட்ட நாளன்று இரவு 8 மணி வரை இணையவழி முறைமையைப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேர்முகத் தேர்வுக்கான திகதியன்று அழைப்புக் கடிதம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள், 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் தமது பெயர் இடம்பெற்றுள்ள பக்கத்தின் பிரதியையும், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்திலுள்ள காத்திருப்பு அறைக்கு அதிகாலையிலேயே வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கான இணைய முறைமை அணுகல் வசதி காலை 8 மணி முதல் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அத்தகைய விண்ணப்பதாரர்கள் இணைய முறைமையைப் பயன்படுத்திக்கொண்டே நேர்முகத் தேர்வு மற்றும் செய்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியும். அத்துடன், பாடசாலை விருப்பத் தெரிவுகள் அடங்கிய ஆவணங்களின் அச்சுப் பிரதிகளை அன்றைய தினம் இரவு 8 மணி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்திலுள்ள காத்திருப்பு அறையில் சமர்ப்பிக்க முடியும்.

இந்த மாற்றங்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவா வருத்தம் தெரிவித்துள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி; வாழ்நாள் முழுவதும் வாகனம் செலுத்தத் தடை விதித்த நீதிமன்றம்!

...

arvoshan.com

ஹட்டன் நகரில் அனுமதியற்ற கடைகள் அகற்றம் – வியாபாரிகள், நகரசபை அதிகாரிகள் இடையே முறுகல்

...

arvoshan.com

நீதிமன்றம் நோக்கிச் சென்ற குணாளன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் – மூன்று விரல்கள் துண்டிப்பு

...

arvoshan.com

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘ரொட்டும்ப அமில’ நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்!

...

arvoshan.com

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோ ஹெரோயின் இந்தியாவில் மீட்பு – இருவர் கைது

...

arvoshan.com

மோசமான காற்றுத் தரம்: சென்னை, திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானங்கள் இரத்து

...

arvoshan.com

சிறுவனை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

...

arvoshan.com

மன்னாரில் சுகாதார விதிமீறல்கள்: மூன்று உணவகங்களுக்கு ரூ.95,000 அபராதம்

...

arvoshan.com

இலங்கையில் ஐஸ்கிரீம் தரம் குறித்து விசேட சோதனைகள் – மூலப்பொருட்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம்

...

arvoshan.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக நாடளாவிய போராட்டம் – செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை!

...

arvoshan.com

அழுங்கினத்தைச் சேர்ந்த எறும்புத்தின்னியை அடித்துக் கொன்ற சம்பவம்; மூவர் கைது – மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

...

arvoshan.com

124 பொருள் வகைகளுக்கான தேசிய வர்த்தக டிஜிட்டல் தளத்தை வர்த்தமானியில் வெளியிட்டது இலங்கை

...

arvoshan.com

ஏர்பஸ் ஊழல் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு – டிசம்பர் 2 வரை விளக்கமறியல்

...

arvoshan.com

வாகன இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான தாமதம் – 2027 ஆகஸ்ட் வரை காத்திருக்க வேண்டிய நிலை!

...

arvoshan.com

அரச பொறியியலாளர்களுக்கான களப்பணி கொடுப்பனவை ரூ.75,000 ஆக அதிகரிக்க சஜித் கோரிக்கை

...