மேற்கு வங்கத்திலும் காலடி பதித்தது தவெக: சமூகப் பணிகள் மூலம் மக்களைக் கவர திட்டம்!

arvloshan.com

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கட்சி அமைப்பை வெளிமாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. கேரளத்தைத் தொடர்ந்து, தற்போது வடமாநிலமான மேற்கு வங்கத்திலும் தவெகவின் புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்தவான் மாவட்டத்திற்குட்பட்ட பகுபூர் பகுதியில் இப்புதிய கிளை அலுவலகம் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த தவெக நிர்வாகி ராஜங்கம், நாடாவை வெட்டி இப்புதிய அலுவலகத்தை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் டி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் கூறுகையில், "இந்த அலுவலகத் திறப்பின் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் தவெகவின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளன. தற்போதைக்கு நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மக்கள் நலச் சமூகப் பணிகள் வாயிலாகச் சாமானிய மக்களைச் சென்றடைவதே எங்களின் முதன்மை இலக்காகும். இதற்கான தெளிவான வழிகாட்டல்கள் தமிழ்நாட்டிலுள்ள தவெக தலைமைப் பீடத்திலிருந்து எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டார்.

கிழக்கு பர்தவான் மாவட்டத்தைத் தொடர்ந்து பங்குரா, பிர்பும் மற்றும் புருலியா ஆகிய மாவட்டங்களிலும் விரைவில் தவெகவின் கட்சி அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

2 நாளில் 9 கொலைகள்: முதல்வர் விஜய்யை சாடும் உதயநிதி, கனிமொழி!

...

arvoshan.com

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி தலைவர்கள் அக். 1-இல் தீவிரப் பிரச்சாரம்!

...

arvoshan.com

மதுரையில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட 'ரோடு ஷோ': கடுமையான வெயிலில் 10 பேர் மயக்கம்!

...

arvoshan.com

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை: 56 பேர் பலி, 1000 வீடுகள் சேதம்!

...

arvoshan.com

இந்தியாவில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் வீழ்ந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

...

arvoshan.com

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் விஜய்

...

arvoshan.com

சூரியசக்தித் துறையில் 16 பில்லியன் $ முதலீடு: இந்தியாவிற்கு அமெரிக்கா விதிக்கும் புதிய வரிச் சவால்!

...

arvoshan.com

‘விஜய்யை சாடிய ஸ்டாலின்’: முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை சுயபரிசோதனை செய்ய கோரிக்கை!

...

arvoshan.com

ஜெம் வீரமணி வழக்கைப் பூசிமெழுகிய திமுக: மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாடல்!

...

arvoshan.com

ஜப்பானுக்குப் போட்டியாக இந்தியாவின் புதிய அதிவேக 'B35' புல்லட் ரயில்!

...

arvoshan.com

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தொழுப்பேட்டில் நாளை முதல்வர் விஜய் தீவிரப் பிரச்சாரம்!

...

arvoshan.com

நொய்டாவில் ஓடும் பேருந்தில் தீ விபத்து: பெண் உட்பட 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு

...

arvoshan.com

திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.29 கோடி உண்டியல் வருமானம்; 33 லட்சம் லட்டுகள் விற்பனை!

...

arvoshan.com

ரூ.10,000 சம்பளப் பிரச்சினை: சூரத்தில் ரூ.24 கோடி ஆடைகள் தீக்கிரை!

...

arvoshan.com

தமிழக மீனவர் படகுகள் அழிப்பு: மத்திய அரசுக்கு மீனவர் காங்கிரஸ் கண்டனம்!

...