திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.29 கோடி உண்டியல் வருமானம்; 33 லட்சம் லட்டுகள் விற்பனை!

arvloshan.com

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8 நாட்களில் மட்டும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் ரூ.28.94 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த பிரம்மோற்சவ விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து வருகை தந்த 5.67 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இக்காலப்பகுதியில் பக்தர்களின் தேவைகளுக்காக 33 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 21.84 லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2.04 லட்சம் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனாக முடி காணிக்கை (தலைமுடி தானம்) செலுத்தியுள்ளனர்.

இம்முறை பிரம்மோற்சவ விழாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், 20 மாநிலங்களைச் சேர்ந்த 295 கலைக்குழுக்களைச் சேர்ந்த 7,871 நடனக் கலைஞர்கள் தமது கலைநிகழ்ச்சிகளை நடத்தியிருந்தனர். அத்துடன் வரலாற்று நிகழ்வாக முதன்முறையாக சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நடனக் குழுவினரும் இதில் பங்கேற்று கலைச் சேவையாற்றினர்.

கோயில் அலங்காரத்திற்காக 60 தொன் மலர்கள், 4 லட்சம் தனிப்பட்ட பூக்கள் மற்றும் 80,000 பருவக்கால மலர்கள் பயன்படுத்தப்பட்டன.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக 3,000 பொலிஸாரும் , தேவஸ்தானத்தின் 2,400 கண்காணிப்புப் பிரிவு ஊழியர்களும் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக முக்கிய நிகழ்வான கருட சேவையின் போது மேலதிகமாக 1,000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அத்துடன், கோயில் வளாகத்தின் தூய்மையைப் பேணுவதற்காக 3,500 தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தொழுப்பேட்டில் நாளை முதல்வர் விஜய் தீவிரப் பிரச்சாரம்!

...

arvoshan.com

நொய்டாவில் ஓடும் பேருந்தில் தீ விபத்து: பெண் உட்பட 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு

...

arvoshan.com

ரூ.10,000 சம்பளப் பிரச்சினை: சூரத்தில் ரூ.24 கோடி ஆடைகள் தீக்கிரை!

...

arvoshan.com

தமிழக மீனவர் படகுகள் அழிப்பு: மத்திய அரசுக்கு மீனவர் காங்கிரஸ் கண்டனம்!

...

arvoshan.com

சபரிமலையில் அரவணைத் தட்டுப்பாடு: கேரள அரசு - தேவஸ்தான வாரியம் இடையே மோதல்

...

arvoshan.com

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதலமைச்சர் விஜய்!

...

arvoshan.com

“முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கு பாடம் புகட்டும் வாய்ப்பே இடைத்தேர்தல்...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

...

arvoshan.com

நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு: முதல்வர் விஜய் விரிவாக்கம்!

...

arvoshan.com

‘தாய்மாமன்’ தங்க மோதிர திட்டத்தை செப். 28-இல் தொடங்குகிறார் முதல்வர் விஜய்!

...

arvoshan.com

டெல்லியில் கொடூரம்: 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

...

arvoshan.com

ரூ.15,300 கோடி முதலீடு: லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்

...

arvoshan.com

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மின்சார இருசக்கர வாகன வாடகைச் சேவை தொடக்கம்!

...

arvoshan.com

ராமசாமி படையாச்சியார் 109-வது பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி!

...

arvoshan.com

விநாயகர் சதுர்த்தி: மகாராஷ்டிராவில் கிலோ 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் தங்க மோதகம்!

...

arvoshan.com

விஜய் சேதுபதி மீதான அவதூறு: தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

...