மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம்: 24 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை

arvloshan.com

நாட்டின் 24 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, இன்று (24) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் அம்பர் நிற வானிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த காற்று மற்றும் கனமழை ஏற்படுவதற்கான சாத்தியமும் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாகவோ அல்லது சில பகுதிகளிலோ இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது வெளிப்புற நடவடிக்கைகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படக்கூடும் எனவும், மின்சார உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திறந்தவெளிகளில் இருப்பவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் நேரிடக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இடியுடன் கூடிய மழை நெருங்கும்போது வெளிப்புற விளையாட்டு, கட்டுமானம் மற்றும் விவசாய நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது கூரையுடன் கூடிய மூடப்பட்ட வாகனங்களுக்குள் தஞ்சமடையுமாறும், கடற்கரைகள், நீர்நிலைகள் மற்றும் ஆறுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தனிமையான மரங்கள், கூடாரங்கள் மற்றும் திறந்த கொட்டகைகளின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்ப்பதுடன், மின்சார உபகரணங்கள், நீர்க்குழாய்கள் மற்றும் மின்சார வயர் கட்டமைப்புகளிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிப்புற நிகழ்வுகளை இரத்துச் செய்யவோ அல்லது பாதுகாப்பான உட்புற இடங்களுக்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை வீடுகளுக்குள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த வானிலை எச்சரிக்கை அதிக நிகழ்தகவு மற்றும் மிதமான பாதிப்பு கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வானிலை அறிவிப்பு இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

தையிட்டி விகாரைக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீளக் கையளிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் போராட்டம்

...

arvoshan.com

ரணில் – அனுர வெளிநாட்டுப் பயணச் செலவுகளில் பெரும் வித்தியாசம்!

...

arvoshan.com

பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை

...

arvoshan.com

இந்தியப் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

...

arvoshan.com

கொழும்பு தங்க நகைக் கடைகளில் நூதன முறையில் திருட்டு – 37 வயதுடைய சந்தேகநபர் கைது

...

arvoshan.com

நீரிழிவு மற்றும் இதய நோயாளர்களுக்கான மருந்துகள்: இந்தியா, சீன நிறுவனங்களுக்கு 5.1 மில்லியன் டொலர் ஒப்பந்தம்

...

arvoshan.com

புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்திக்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி

...

arvoshan.com

பிரிட்டனின் உதவியுடன் இலங்கை சுங்கத் துறையில் சீர்திருத்தங்களை முன்னெடுக்க நடவடிக்கை

...

arvoshan.com

கொழும்பு துறைமுக நகரில் தெற்காசியாவின் முதலாவது ‘ஏர் டோம்’ அமைப்பு – 4,000 பேருக்கு இடமளிக்கும் வசதி

...

arvoshan.com

வெளிநாடுகளால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 2026இல் 40ஆகக் குறைவு

...

arvoshan.com

சிங்கப்பூரில் தீபாவளி விழாவைக் கொண்டாடிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

...

arvoshan.com

பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் நாளை ஒருநாள் பணிப்புறக்கணிப்பு

...

arvoshan.com

பட்டிப்பொல வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஆறு பேர் கைது

...

arvoshan.com

வெளிவிவகார அமைச்சுக்கான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

...

arvoshan.com

இம்ரான் கானின் விடுதலை தொடர்பான விவாதத்தைத் தடுத்தமைக்கு ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பு

...