பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்யின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

arvloshan.com

பெரம்பூர் தொகுதியில் தமிழக முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, அத்தொகுதி வாக்காளரான தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி வி. லட்சுமி நாராயணன் விசாரித்தார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், விஜய் மற்றும் தினேஷ் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

சொத்து விவரங்களை மறைத்ததாகக் குற்றச்சாட்டு

விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியதாகக் கூறப்படும் ரூ.30 கோடி மதிப்பிலான விவசாய நிலம் தொடர்பான விவரங்களைத் தெரிவிக்கவில்லை என தினேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. சொத்து விவரங்களை மறைத்திருப்பது வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையைப் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் உள்ளதாகக் கூறப்படும் 50 சென்ட் நிலம், வருவாய்த் துறை ஆவணங்களின்படி அரசு புறம்போக்கு நிலம் என தினேஷ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

வேட்புமனுவில் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை மறைப்பது விதிமீறலாகக் கருதப்படுவதைப் போலவே, சொத்து விவரங்களை மறைப்பதும் விதிமீறல் மட்டுமின்றி ஊழல் நடவடிக்கையாகவும் கருதப்பட வேண்டும் என தினேஷ் தரப்பு வாதிட்டது.

மேலும், வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தேர்தல் அதிகாரியால் முழுமையான விசாரணை நடத்த முடியாது என்றும், தேர்தல் வழக்கின் மூலமே இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும் என்பதால் வழக்கை நிராகரிக்கக் கூடாது என்றும் கோரப்பட்டது.

நீதிபதி எழுப்பிய கேள்விகள்

விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி வி. லட்சுமி நாராயணன், ஆக்கிரமிப்பாளராக இருப்பது தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியிழப்பை ஏற்படுத்துமா எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், வில்பட்டியில் உள்ள நிலம் தொடர்பாக விஜய் விற்பனைப் பத்திரத்தை வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளாரே என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த தினேஷ் தரப்பு, தங்களது வாதத்துக்கு ஆதரவாக வருவாய்த் துறை ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தது.

விஜய் தரப்பு வாதம்

மறுபுறம், விஜய் தரப்பில் ஆஜரானவர்கள், வேட்புமனுவில் தேவையான அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தத் தகவலும் மறைக்கப்படவில்லை என்றும் வாதிட்டனர்.

மேலும், தகவல்களை மறைப்பது வாக்காளர்களின் முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கும் எனக் கூறி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, குற்ற வழக்குகள் தொடர்பான விவகாரத்துக்குப் பொருந்துவதாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விஜய் வசதிபடைத்தவர் என்பது வாக்காளர்களுக்குத் தெரிந்த விஷயம் என்றும், இந்நிலையில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறப்படுவது வாக்காளர்களின் முடிவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கேள்வி எழுப்பிய விஜய் தரப்பு, தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், விஜய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கணவரைக் கொலை செய்து நீல டிரம்மில் மறைத்த வழக்கு: மனைவி, காதலருக்கு மரண தண்டனை!

...

arvoshan.com

முதல்வர் விஜய்க்கு சால்வை: கொச்சைப்படுத்த வேண்டாம் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

...

arvoshan.com

ஹார்முஸ் நீரிணையில் பெரும் விபத்து: கடல் வெடிமருந்தில் மோதி கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற மாபெரும் கப்பல் தீப்பற்றி எரிந்தது

...

arvoshan.com

உச்ச நீதிமன்றத்தை நோக்கி இண்டியா கூட்டணி பேரணி: ராகுல், நேஹா உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

...

arvoshan.com

“இந்தியாவின் முதலாளி அம்பானியா?”: எலான் மஸ்க் கேள்வி

...

arvoshan.com

தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக அபார வெற்றி!

...

arvoshan.com

"இந்தியாவிற்கு வருக எலோன், மற்றவரை சந்திக்கும் வரை காத்திருங்கள்": ராகுல் காந்தி கருத்து!

...

arvoshan.com

இந்தியத் திரைத்துறையின் சிரேஷ்ட நடிகரான நானா படேக்கர் மாரடைப்பால் காலமானார்

...

arvoshan.com

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு வீழ்ச்சி; 9இல் வாக்கு எண்ணிக்கை!

...

arvoshan.com

2023க்குப் பின்னரான அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய பிரகாஷ் ராஜ் கோரிக்கை

...

arvoshan.com

இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை: இஸ்ரேலிய தூதர் எச்சரிக்கை!

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் கேரளப் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

...

arvoshan.com

இந்தியாவின் அணுஆயுத இருப்பு 190 ஆக அதிகரிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

...

arvoshan.com

சாலை வசதியில்லை: கர்ப்பிணியை 8 கி.மீ. தூளியில் சுமந்து சென்ற உறவினர்கள்!

...

arvoshan.com

தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?: மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம்

...