பிரான்ஸ் இரத்த வங்கிகள் மீது சைபர் தாக்குதல்: குளிரூட்டும் வெப்பநிலையை 110°C ஆக மாற்ற முயற்சி!

arvloshan.com

பிரான்ஸில் இரத்தச் சேமிப்பு நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலின்போது, இரத்தப் பொருட்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் குளிரூட்டும் கட்டமைப்புகளின் வெப்பநிலையை 110 பாகை செல்சியஸாக உயர்த்த ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் இரத்த நிறுவனத்தினால் (EFS) நிர்வகிக்கப்படும் மூன்று இரத்தச் சேமிப்பு நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. குறித்த நிலையங்களில் இரத்த மாற்றுச் சிகிச்சைகளுக்கும் மருந்து உற்பத்திக்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்மா சேமித்து வைக்கப்படுகின்றது.

பிரான்ஸ் ஊடகங்களின் தகவலின்படி, உபகரணங்களை வழங்கும் நிறுவனமொன்றின் ஊடாக குளிரூட்டல் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை ஹேக்கர்கள் இலக்குவைத்துள்ளனர். இதன்போது, வழக்கமாக மைனஸ் 30 பாகை செல்சியஸில் பராமரிக்கப்படும் வெப்பநிலையை 110 பாகை செல்சியஸாக மாற்ற முயற்சித்துள்ளனர்.

எனினும், கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை கட்டமைப்புகள் மூலம் இந்த அசாதாரண மாற்றங்கள் உடனடியாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், இரத்தப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் அவற்றைப் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதிகாரிகளால் முடிந்துள்ளது.

இந்தச் சம்பவம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் எந்தவொரு இரத்தப் பொருட்களும் இழக்கப்படவில்லை என்பதுடன், இரத்தச் சேகரிப்பு மற்றும் விநியோகச் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டல் கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இதன்போது, தொலைவிலிருந்து குளிரூட்டும் வெப்பநிலையை மாற்றியமைத்ததால் பெருமளவிலான உணவுப் பொருட்கள் சேதமடைந்திருந்தன.

இந்நிலையில், பிரான்ஸில் இடம்பெற்றுள்ள அண்மைய சைபர் தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும், ஐரோப்பிய நாடுகளில் முன்னதாக இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா அல்லது இதன் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளனர் என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


ஏனைய செய்திகள்

arvoshan.com

டைட்டானிக்கை விட நீளமான கப்பல் கடலில் மூழ்கடிப்பு! உலகின் மிகப்பெரிய செயற்கைப் பவளப்பாறையாக மாற்றம்

...

arvoshan.com

புரூக்ளின் கட்டட இடிபாடு: உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

...

arvoshan.com

கல்விச் சான்றிதழ் சர்ச்சை: இந்தோனேசிய துணை ஜனாதிபதி பதவி விலகல்

...

arvoshan.com

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா பரவல்: 11 ஆயிரத்தைக் கடந்த தொற்றாளர்கள்; 5,387 பேர் உயிரிழப்பு

...

arvoshan.com

ரஷ்யா – உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்கு இணக்கம்: போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் இல்லை

...

arvoshan.com

பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளர் வீட்டில் சடலமாக மீட்பு; கணவர் கொலை செய்ததாக ஒப்புதல்!

...

arvoshan.com

ஈரானுடனான போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப்

...

arvoshan.com

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் – ட்ரம்ப் அறிவிப்பு

...

arvoshan.com

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் சாதனங்கள் மீது சைபர் தாக்குதல் – ஈரான் மீது குற்றச்சாட்டு!

...

arvoshan.com

பராகுவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணை; பதவி நீக்க நடவடிக்கையும் ஆரம்பம்!

...

arvoshan.com

வங்கி நெருக்கடியால் ஜனாதிபதி பதவி விலகல் – பராகுவேயில் அரசியல் நெருக்கடி!

...

arvoshan.com

பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்க மறுத்த இத்தாலிய சமையல் கலைஞர் அவுஸ்திரேலியாவில் பணிநீக்கம்!

...

arvoshan.com

ஜோர்டானில் இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே பயங்கரவாதத் தாக்குதல் – பாதுகாப்பு அதிகாரி பலி!

...

arvoshan.com

பிரான்ஸில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: மக்ரோன் அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

...

arvoshan.com

ட்ரம்பின் ‘ஹஷ் மணி’ வழக்கு: குற்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கறிஞர்கள் முன்னிலை

...