நீதிமன்றம் நோக்கிச் சென்ற குணாளன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் – மூன்று விரல்கள் துண்டிப்பு

arvloshan.com

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில், மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இன்று (19.11.2026) காலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக முன்னிலையாவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, இனந்தெரியாத மூவர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

புங்குடுதீவில் இடம்பெற்ற சட்டவிரோத மாடுகடத்தல் சம்பவம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பேருந்து உரிமையாளர் அகிலன் கொலைச் சம்பவம் தொடர்பாக, கொலையாளிகளை அடையாளம் காட்டியமை சார்ந்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

குறித்த வழக்கில் முன்னிலையாவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், மூன்று விரல்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி; வாழ்நாள் முழுவதும் வாகனம் செலுத்தத் தடை விதித்த நீதிமன்றம்!

...

arvoshan.com

ஹட்டன் நகரில் அனுமதியற்ற கடைகள் அகற்றம் – வியாபாரிகள், நகரசபை அதிகாரிகள் இடையே முறுகல்

...

arvoshan.com

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘ரொட்டும்ப அமில’ நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்!

...

arvoshan.com

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோ ஹெரோயின் இந்தியாவில் மீட்பு – இருவர் கைது

...

arvoshan.com

அனைத்து மாகாணங்களிலும் ஆசிரியர் நியமன நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

...

arvoshan.com

மோசமான காற்றுத் தரம்: சென்னை, திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானங்கள் இரத்து

...

arvoshan.com

சிறுவனை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

...

arvoshan.com

மன்னாரில் சுகாதார விதிமீறல்கள்: மூன்று உணவகங்களுக்கு ரூ.95,000 அபராதம்

...

arvoshan.com

இலங்கையில் ஐஸ்கிரீம் தரம் குறித்து விசேட சோதனைகள் – மூலப்பொருட்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம்

...

arvoshan.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக நாடளாவிய போராட்டம் – செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை!

...

arvoshan.com

அழுங்கினத்தைச் சேர்ந்த எறும்புத்தின்னியை அடித்துக் கொன்ற சம்பவம்; மூவர் கைது – மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

...

arvoshan.com

124 பொருள் வகைகளுக்கான தேசிய வர்த்தக டிஜிட்டல் தளத்தை வர்த்தமானியில் வெளியிட்டது இலங்கை

...

arvoshan.com

ஏர்பஸ் ஊழல் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு – டிசம்பர் 2 வரை விளக்கமறியல்

...

arvoshan.com

வாகன இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான தாமதம் – 2027 ஆகஸ்ட் வரை காத்திருக்க வேண்டிய நிலை!

...

arvoshan.com

அரச பொறியியலாளர்களுக்கான களப்பணி கொடுப்பனவை ரூ.75,000 ஆக அதிகரிக்க சஜித் கோரிக்கை

...