நிலுவை BO5, BO7 விண்ணப்பங்களுக்காக மேலதிக சேவை நாட்கள் அறிவிப்பு
நிலுவையில் உள்ள பயனடைதல் உரிமையாளர் (Beneficial Ownership) தொடர்பான BO5 மற்றும் BO7 விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதற்காக, எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை மேலதிக பொதுமக்கள் சேவை நாட்களை வழங்குவதற்கு நிறுவனப் பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு நிறுவனப் பதிவாளர் நாயகம் வெளியிட்டுள்ள பொது அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மேலதிக சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த மேலதிக சேவை நேரங்கள், நிலுவையில் உள்ள BO5 மற்றும் BO7 விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் வழமைபோன்று பொதுமக்கள் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.