ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026 நவம்பர் 20ஆம் திகதி காலை ராஜகிரியவில் அமைந்துள்ள விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள முதியவர்களின் நலன்கள் மற்றும் வசதிகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
இதன்போது, முதியோர் இல்லத்தின் பெண்கள் பிரிவுக்குச் சென்ற பிரதமர், அங்குள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் நலன் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு உணவுப் பொதிகளையும் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, பெண்கள் பிரிவின் வசதிகளைப் பார்வையிட்ட பிரதமர், புதுப்பிக்கப்பட்ட சமையலறையையும் ஆய்வு செய்துள்ளார்.
அதன் பின்னர், ஆண்கள் பிரிவுக்குச் சென்ற அவர், அங்குள்ள முதியவர்களின் நலன் குறித்துக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்கும் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளார். மேலும், முதியோர் இல்லத்தின் பணியாளர்களுடனும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விஜயத்தில் கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி, கோட்டே மாநகர சபை மேயர் அரோஷா அத்தபத்து, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார, விக்டோரியா முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் ஜகத் கொடகொட உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும், மேல் மாகாண பிரதம செயலாளரும் இந்த ஆய்வு விஜயத்தில் பங்கேற்றிருந்தார்.