ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு

arvloshan.com

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்மானம், நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ஆம் திகதி நிறைவு செய்திருந்தது.

இதன்போது, சட்டமூலத்தின் சில சரத்துகள் தொடர்பில் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அரசாங்கம் முன்மொழிந்திருந்த பல திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்திற்கு விளக்கமளித்திருந்தது.

விசாரணையின் நிறைவில், சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான இரகசியத் தீர்மானம் சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை விசாரித்திருந்தது.

விசாரணையின்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயரத்ன, நாடாளுமன்றக் குழுநிலை விவாதத்தின்போது குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான ஆவணமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி, சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் அதிகபட்ச காலத்தை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்தல், பச்சை குத்தல்கள் மற்றும் உடலில் காணப்படும் அடையாளங்கள் தொடர்பான சரத்துகளை நீக்குதல் ஆகிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும், கலால் கட்டளைச் சட்டத்தின் கீழான அனைத்து குற்றங்களையும், அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழான பதிப்புரிமை தொடர்பான குற்றங்களையும் சட்டமூலத்திலிருந்து நீக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், பாரதூரமான குற்றச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு முன்னதாக நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற சரத்தையும் நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்து வைப்பது மற்றும் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிப்பது தொடர்பான திருத்தங்கள் பின்னர் உரிய கட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பொரளை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இன்று இரவு முதல் வீதி மூடல்

...

arvoshan.com

15 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் வரி அதிகாரிக்கு சிறைத்தண்டனை

...

arvoshan.com

நிலுவை BO5, BO7 விண்ணப்பங்களுக்காக மேலதிக சேவை நாட்கள் அறிவிப்பு

...

arvoshan.com

2024–2026 காலப்பகுதியில் சீனாவின் பயிற்சித் திட்டங்களால் 2,481 இலங்கை அரச அதிகாரிகள் பயன்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

...

arvoshan.com

ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்

...

arvoshan.com

வாகனக் கடன் மற்றும் குத்தகை வசதிகளுக்கு இலங்கை மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகள்

...

arvoshan.com

சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் போலிச் செய்திகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது – பொலிஸ் பேச்சாளர்

...

arvoshan.com

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி அனுப்பிய 9 கடிதங்களுக்கும் பதிலில்லை – தொழிற்சங்க நடவடிக்கைக்கு GMOA எச்சரிக்கை

...

arvoshan.com

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக் கொலை: சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

...

arvoshan.com

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு சுகாதார எச்சரிக்கை

...

arvoshan.com

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை புதிய சாதனை

...

arvoshan.com

இலங்கையில் FBI அதிகாரிகள்: 80க்கும் மேற்பட்ட சாதனங்கள் ஆய்வு

...

arvoshan.com

இம்ரான் கான் விடுதலை தொடர்பான விவாதத்திற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் தடை

...

arvoshan.com

மொனராகலையில் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 2,100 கஞ்சா செடிகள் மீட்பு – சந்தேகநபர் கைது

...