மொனராகலையில் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 2,100 கஞ்சா செடிகள் மீட்பு – சந்தேகநபர் கைது
மொனராகலை, உனகந்த வனப்பகுதியில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 2,100 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (19) மொனராகலை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த வனப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, சுமார் மூன்று அடி உயரம் கொண்ட 2,100 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றைப் பயிரிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.