2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (20) நாடாளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 60 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பில் எந்தவொரு உறுப்பினரும் வாக்களிப்பில் இருந்து விலகவில்லை.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், ஏழு நாட்கள் இடம்பெற்ற நிலையில் இன்று நிறைவடைந்தது.
இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.