நாளை முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

arvloshan.com

இலங்கையில் வங்கிக் கணக்குகளைத் திறத்தல், வாகனங்களைப் பதிவு செய்தல், காணிகளைப் பதிவு செய்தல், வணிகங்களைப் பதிவு செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல முக்கிய பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழ் (TIN Certificate) நாளை (நவம்பர் 1) முதல் கட்டாயமாக்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத் திருத்தத்தின் கீழ், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 102(3) ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனைகளுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கணக்குகளைத் திறத்தல், கட்டட நிர்மாணத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல், காணிகள் மற்றும் காணி உரிமைகளைப் பதிவு செய்தல், வணிகங்களைப் பதிவு செய்தல், இலங்கை நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு செல்லுபடியாகும் TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்யும் சந்தர்ப்பங்களில், பங்குகளை வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆகிய இருவரும் தங்களது TIN விபரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

குறித்த பரிவர்த்தனைகளை முன்னெடுப்பதற்கு அல்லது நிறைவு செய்வதற்கு முன்னர், தேவையான TIN ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், இறைவரித் திணைக்களத்தின் மின்னணுச் சேவைத் தளத்தின் (e-Services) ஊடாக முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளவர்கள், அதனை இறைவரித் திணைக்களத்தின் e-Services இணையத்தளத்தின் ஊடாகச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இதன்போது, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றைக் காண்பிக்கும் சரிபார்ப்பு முடிவின் அச்சுப் பிரதியும் உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று 18 வயதைப் பூர்த்தி செய்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து இலங்கை வதிவிடப் பிரஜைகளும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

அத்துடன், 2024 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் அந்த வயதை அடைந்ததும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மேலும் வரிக்குறைப்புகள் – ஜனாதிபதி அநுர குமார அறிவிப்பு!

...

arvoshan.com

காட்டு யானையைப் பிடிக்க அல்லது காயப்படுத்த பொறி வெடி வைத்த நபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம்!

...

arvoshan.com

கொழும்பில் 5.96 கோடி ரூபாய் நிதி மோசடி – தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

மீண்டும் இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள்!

...

arvoshan.com

நவம்பர் 2 முதல் மீண்டும் இணையவழி முன்பதிவு முறை அமுல்!

...

arvoshan.com

திருடனைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் – திருடப்பட்ட கைப்பேசியை மீட்டார்!

...

arvoshan.com

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 51.5 சதவீதத்தால் அதிகரிப்பு – 4.5 பில்லியன் டொலரை எட்டியது

...

arvoshan.com

2026ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலங்கையர்கள் செலவிட்ட தொகை 62% அதிகரிப்பு!

...

arvoshan.com

ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய மின்தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகின் செயலிழப்பே காரணம் – ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை

...

arvoshan.com

வாட்ஸ்அப் ஊடாகப் பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி 14.5 இலட்சம் ரூபாய் மோசடி – பெண் கைது!

...

arvoshan.com

வாகன இறக்குமதிச் செலவில் செப்டம்பரில் 34.4% வீழ்ச்சி!

...

arvoshan.com

நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை – ஒரு மில்லியன் ரூபா அபராதம், 10 ஆண்டுகள் சிறை!

...

arvoshan.com

பொதுநலவாய உச்சி மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரதமர் ஹரிணி!

...

arvoshan.com

தங்கத்தைப் பறிக்க வர்த்தகரை சித்திரவதை செய்த பொலிஸார் – மூன்று அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

...

arvoshan.com

அகதியாக 7 வயதில் தமிழகம் வந்த இலங்கை இளைஞர் – 30 ஆண்டுகளாக அடையாளம் தேடும் அவலம்!

...