தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி
தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவை உத்தியோகபூர்வமாக நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இந்தக் குழுவை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) உறுப்பு நாடாக உள்ள இலங்கை, நாட்டின் அணுசக்தி பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய, கதிரியக்கப் பொருட்கள் தொடர்பான அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்தல், அவற்றைப் பயன்படுத்தி அனுமதியற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல் மற்றும் தேசிய அணுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய பணிகளை இந்த நிரந்தர பல்துறை ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுக்கவுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் செயற்படவுள்ளதுடன், இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை பேரவையின் பணிப்பாளர் நாயகம் குழுவின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.