தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வ நிறைவு

arvloshan.com

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி அறப்போராட்டம் நடத்தி உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு, இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் முறைப்படி ஆரம்பமாகின.

இதன்போது, நினைவிடத்தின் முதன்மை ஈகைச்சுடரினை மாவீரர்களான அன்புக்குமாரன் மற்றும் தம்பமணி ஆகியோரின் பெற்றோர்களான அருணாச்சலம் வல்லிபுரம் மற்றும் வல்லிபுரம் செல்வராணி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

அதேநேரம், தியாக தீபம் திலீபன் உண்ணாநோன்பிருந்த நல்லூர் ஆலய வீதியில் அமைக்கப்பட்ட பகுதியில், மாவீரர்களான செல்லக்கண் மற்றும் இசைச்செல்வன் ஆகியோரின் சகோதரியும் போராளியுமான சுப்பிரமணியம் மலர்விழி ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நினைவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபத்தின் திருவுருவச் சிலைக்கு மாவீரர் அறிவின் தந்தையான மூத்த போராளி முத்துக்குமார் மனோகர் மலர்மாலை அணிவித்து கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த மக்கள் மற்றும் பிரதிநிதிகள் மலர் தூவி தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

இறுதிநாள் நிகழ்வின் ஒரு அங்கமாக, இளைஞர் ஒருவர் தூக்குக்காவடி எடுத்து வந்து தியாக தீபத்தின் நினைவிடத்தில் தனது உணர்வுப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்தினார்.

மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் தியாக தீபத்தின் திருவுருவப் படங்கள் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட வாகன ஊர்திகள் அணிவகுத்து திலீபனின் நினைவாலயத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

லீசிங் நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்ற முடியுமா? சட்ட நிலைமையை தெளிவுபடுத்துகிறது பொலிஸ்

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்த முயன்ற 57 கிலோ போதைப்பொருட்கள் கனடாவில் கைப்பற்றல்: பயணி கைது

...

arvoshan.com

பொலன்னறுவை மருத்துவமனை வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் உயிரிழப்பு

...

arvoshan.com

திஸ்ஸமஹாராமவில் யானைத் தந்தம் மற்றும் கருபவள ஆபரணங்களுடன் இருவர் கைது!

...

arvoshan.com

வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் PAYE வரியிலிருந்து நிவாரணம்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய குறிப்பு!

...

arvoshan.com

இலங்கையின் சூரிய மின் உற்பத்தி 3,070 மெகாவாட்டைத் தாண்டியது!

...

arvoshan.com

ஒக்டோபர், நவம்பரில் இலங்கைக்கு வெள்ள அபாயம்: வானிலை மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

2025 சாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

...

arvoshan.com

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

...

arvoshan.com

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு: 7 பேர் காயம்!

...

arvoshan.com

பயத்தின் மேலாதிக்கத்தை உடைக்க பல லசந்தாக்கள் உருவாக வேண்டும்: இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்!

...

arvoshan.com

ஒற்றைப் பிரதிக்காக 850 ரூபாய் கட்டணம்: புத்தளத்தில் கடை முற்றுகை

...

arvoshan.com

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் அவர் பிறந்த மண்ணான ஊரெழுவில் அனுஸ்டிப்பு

...

arvoshan.com

சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

...

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...