தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பு – பொலிஸார் விசேட அறிவுறுத்தல்

arvloshan.com

இலங்கையில் தனியாக வசிக்கும் முதியவர்கள் கொள்ளை மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு இலக்காகும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பொலிஸார், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.

தனிமையில் வசிக்கும் முதியவர்களின் வீடுகளை இலக்கு வைத்து பணம், தங்க நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, பொலிஸார் இன்று (17) இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, பிள்ளைகள் தொழில் நிமித்தம் வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ள அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் நிலையில், தனியாக வாழும் முதியவர்கள் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு இலகுவாக இலக்காகக்கூடும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையான சிலர் இவ்வாறான வீடுகளை இலக்கு வைத்து பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிடுவதாகவும், அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களில் கொள்ளை முயற்சிகளின்போது கொலைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குடும்பத்தினரும் பொதுமக்களும் மேலதிக அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி, வீட்டு வேலைகள் அல்லது முதியவர்களைப் பராமரிப்பதற்காக பணியாளர்களை அமர்த்தும்போது, அவர்களின் பின்னணி குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவிலிருந்து பொலிஸ் நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119, சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையின் 1990, அருகிலுள்ள பொலிஸ் நிலையம், அயலவர்கள் மற்றும் குடும்ப வைத்தியர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களை வீட்டில் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாக வசிக்கும் முதியவர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூக பொலிஸ் குழுவினருக்கு அறிவிப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அவசரத் தொடர்பு இலக்கங்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட எளிய கையடக்கத் தொலைபேசிகளை முதியவர்களுக்கு வழங்குமாறும் குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அயலவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுதல், வீடுகளுக்குள் பழுதுபார்ப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக வருபவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதிய பெற்றோர் சமூக ரீதியாகத் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருப்பதுடன், அடிக்கடி நேரில் சென்று நலம் விசாரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அயலவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணுவதன் மூலம், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு குற்றச் சம்பவங்களைத் தடுக்க முடியும் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்க முன்வருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

ரணில் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டதாகக் கூறுவது பொய் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

...

arvoshan.com

வட்டவளையில் உணவு ஒவ்வாமை: 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

...

arvoshan.com

சத்தரதன தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை? பொலிஸாரிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்

...

arvoshan.com

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

...

arvoshan.com

சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள்

...

arvoshan.com

வருமான இலக்கைத் தாண்டியது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

...

arvoshan.com

வர்த்தக அமைச்சின் தலையீட்டால் LAUGFS எரிவாயு விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு!

...

arvoshan.com

இலங்கைக்கான ஏழு புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்

...

arvoshan.com

தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

ஊழல் குற்றச்சாட்டு: ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித விளக்கமறியலில்!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர் அனுமதி வெட்டுப்புள்ளி மதிப்பெண்கள் வெளியீடு!

...

arvoshan.com

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அறிவுசார் சொத்துரிமை சேவைக் கட்டணங்களைத் திருத்த நடவடிக்கை

...

arvoshan.com

அஸ்வெசும பயனாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 2 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு

...

arvoshan.com

சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மாமனும் மருமகனும் மீது குற்றச்சாட்டு

...

arvoshan.com

பிரைம் மெல்வாவுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக அந்தஸ்து

...