செயற்கை நுண்ணறிவு சர்ச்சை: நிகான் அறிவியல் ஒளிப்பட போட்டி வெற்றிப் பதிவு மீண்டும் ஆய்வு!

arvloshan.com

சர்வதேச அளவில் புகழ்பெற்ற அறிவியல் ஒளிப்படப் போட்டியொன்றில் முதலிடம் பிடித்த காட்சிப் பதிவு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து, அது தொடர்பில் போட்டி அமைப்பாளர்கள் மீண்டும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றல்மிக்க நுண்ணோக்கிகளைப் (Microscopes) பயன்படுத்தி எடுக்கப்படும் ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கான 'ஸ்மால் வேர்ல்ட் இன் மோஷன்' (Small World In Motion) என்ற வருடாந்த போட்டியை நிகான் (Nikon) நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகின்றது.

இவ்வாண்டிற்கான போட்டியில், சீனாவின் த்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் (Tsinghua University) ஆய்வாளர் கலாநிதி நிங் சூ சமர்ப்பித்த குறுகிய காணொளி முதலிடத்தைப் பெற்றது. அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் சுவாசப் பாதையில் உள்ள 'சிலியா' (Cilia - நுண் மயிர் போன்ற அமைப்புகள்) எனப்படும் நுண் உறுப்புகளின் அசைவுகளை இக்காணொளி சித்தரிப்பதாகக் கூறப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கருத்துக்கான கோரிக்கைக்கு கலாநிதி சூ பதிலளிக்கவில்லை எனினும், போட்டி விதிகளைத் தான் மீறவில்லை என இணையவழியில் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

நிகான் நிறுவனம் லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்ட பதிவொன்றுக்கு பதிலளித்துள்ள அவர், காட்சி செயலாக்கத்தின் (Image processing) போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதை மறுக்கவில்லை. எனினும், அது போட்டியின் விதிகளுக்குட்பட்டே இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். "பரிசோதனை சார்ந்த காணொளி, சிலியா அமைப்புகள் அல்லது அவற்றின் இயக்கம் ஆகியவற்றை உருவாக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கலாநிதி சூ சமர்ப்பித்த காணொளி செயற்கையாக பிரகாசமான வண்ணங்களைக் கொண்டுள்ள போதிலும், நுண்ணோக்கி முறையில் இத்தகைய வண்ணங்கள் கைமுறையாகப் பூசப்படுவது வழக்கமானது என்பதால் அதற்குப் போட்டியில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. "மீளமைக்கப்பட்ட சாம்பல் அளவிலான படங்களின் (Grayscale images) அம்சங்களைப் பிரித்தறிவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் மட்டுமே செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது" என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இருப்பினும், இக்காணொளியில் உள்ள சில வடிவங்கள் மற்றும் இயக்கங்கள் இயல்பான செல்லுலார் (Cellular - செல் சார்ந்த) அமைப்புகள் அல்லது நடத்தைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், சிலியா அமைப்புகள் அளவுக்கு அதிகமாகப் பெரியதாகத் தோன்றுவதாகவும் ஏனைய விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் எட்வர்ட் பெல்ப்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், காணொளியில் உள்ள சில அமைப்புகள் திடீரெனத் தோன்றி மறறைவதாகவும், சிலியா அமைப்புகள் எவ்வித ஆதாரமுமின்றி திடீரென உருவாவதாகவும் அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இக்காணொளியின் மூலப் படத்தில் அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் தனித்துவமான வாட்டர்மார்ட் (Watermark - நீர்முத்திரை) ஒன்று காணப்படுவதாக யு.டி. தென்மேற்கு மருத்துவ மையத்தின் கலாநிதிப் பட்ட ஆய்வாளர் இயன் டோனோவன் தெரிவித்துள்ளார். மேலும், இப்போட்டியின் முன்னாள் நடுவர்கள் இருவரும் குறித்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு

குறித்த ஆய்வாளர் தமது விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், கூடுதல் தொழில்நுட்ப ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும் நிகான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இப்போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பிடித்த கலாநிதி பேட்ரிக் ஹிக்கி கூறுகையில், இப்போட்டியில் கிடைக்கும் 3,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை விடவும் இங்கீகாரம் மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டார். "இருண்ட அறையில் நுண்ணோக்கியின் வழியே நீண்ட நேரம் பணியாற்றும் எமக்கு, நமது கண்டுபிடிப்புகளை மக்களுக்கும் உலகிற்கும் வெளிப்படுத்த இதுவொரு சிறந்த வாய்ப்பாகும்" என அவர் மேலும் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி: எலான் மஸ்க் சர்ச்சைக் கருத்து

...

arvoshan.com

சமூக ஊடகங்களால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: ஆய்வில் தகவல்!

...

arvoshan.com

பாதுகாப்புக் கவலைகளைத் தவிர்த்து புதிய செயற்கை நுண்ணறிவு முகவரை அறிமுகப்படுத்தியது ஒபன்ஏஐ!

...

arvoshan.com

ஷைனிஹன்டர்ஸ் ஊடுருவல் வழக்கு: ‘திருந்திய ஹேக்கர்’ நெதர்லாந்தில் கைது

...

arvoshan.com

மண்ணில் விழுந்து தீப்பற்றியது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்: சுற்றுவட்டப்பாதையை அடைந்து புதிய சாதனை!

...

arvoshan.com

அப்பிள் நிறுவனத்திற்கு 5.7 பில்லியன் டொலர் நஷ்டஈடு: காப்புரிமை மீறல் வழக்கில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

...

arvoshan.com

சாட்ஜிபிடியுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு

...

arvoshan.com

OpenAI செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அமெரிக்க அரசு இணையதளங்களில் அத்துமீறல்!

...

arvoshan.com

தீக்காய அபாயம்: கனடா, அமெரிக்காவில் ஸ்மார்ட் கண்ணாடிகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டன!

...

arvoshan.com

ஆஸ்திரேலிய அரச இணையதளத்தில் OpenAI ஊடுருவல்: பிரதமர் கண்டனம்

...

arvoshan.com

இந்தியாவில் கோலாகலமாகத் தொடங்கிய 'ஐபோன் 18' விற்பனை: நீண்ட வரிசையில் திரண்ட மக்கள்!

...

arvoshan.com

கூகுளின் 'ஜெமினி' AI ஊடுருவல்: சோதனையில் 3 நிறுவனங்கள் பாதிப்பு!

...

arvoshan.com

அடுத்த ஆண்டுக்குள் 'ரோபோ மூளை' புரட்சி: சீன நிறுவனம் சாதனை!

...

arvoshan.com

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்க யோசனை!

...

arvoshan.com

பொய் பேசும் செயற்கை நுண்ணறிவு முதல் மனிதகுலத்தின் அழிவு வரை: தொழில்நுட்ப உலகின் ஆபத்தான கட்டம்!

...