சுறா இறக்கைகளுடன் 5 மீனவர்கள் கைது
வெள்ளாமங்கர மீன்பிடித் துறைமுகத்தில் சுறா மீனின் இறக்கைகள் மற்றும் உலர்த்தப்பட்ட சுறா மீன் பகுதிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஐந்து மீனவர்கள் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (அக்டோபர் 1, 2026) குறித்த துறைமுகத்தில் நடைபெற்ற வருகைப்பதிவு மற்றும் சோதனைகளின் போதே இம்மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 35 கிலோகிராம் உலர்த்தப்பட்ட சுறா மீன் பகுதிகளும், 4.5 கிலோகிராம் சுறா மீனின் இறக்கைகளும் கடலோரக் காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சுறா மீன் பொருட்கள், படகு மற்றும் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெள்ளாமங்கர மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.