காந்தி ஜெயந்தி: அலரிமாளிகையில் மகாத்மா காந்தி உருவச்சிலைக்குப் பிரதமர் ஹரிணி மலரஞ்சலி!
அகிம்சையின் முன்னோடியான மகாத்மா காந்தியின் 157 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அலரிமாளிகையில் அமைந்திருக்கும் அவரது உருவச்சிலைக்குப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்ததின நினைவு நிகழ்வு அலரிமாளிகையில் அக்டோபர் 2 ஆம் திகதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர்.