சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மாமனும் மருமகனும் மீது குற்றச்சாட்டு
நக்கிள்ஸ் மலைப்பகுதியில் உள்ள குகையொன்றில் குழந்தையுடன் கண்டுபிடிக்கப்பட்ட 15 வயது சிறுமி, குழந்தை பிறப்பதற்கு முன்னரும் அதன் பின்னரும் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் இருவரும் மாமன் மற்றும் மருமகன் உறவுமுறையைக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு 36 வயதுடைய சந்தேகநபர் முதன்முதலில் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதன் பின்னர் இளைய சந்தேகநபரும் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் நீண்டகாலமாகப் பல தடவைகள் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாகச் சிறுமி கர்ப்பமடைந்ததுடன், பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குழந்தை பிறந்த பின்னரும் சந்தேகநபர்கள் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.